|
செ
சொல்லுகிறாராதல்.
‘ஆயின், அவன் நினைவு அப்படியிருக்குமோ?’ எனின், 1‘நம:’ என்ற சொல்லைக் கனக்க
நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?
2‘திரௌபதி
வெகுதூரத்தில் வசிக்கின்ற என்னைக் ‘கோவிந்தா!’ என்று கூவி அழுதாள் என்பது யாதொன்று உண்டு;
அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே,
‘கோவிந்தா!’ என்று நம் பேரைச் சொன்னாள்; நாம் ஒன்றும் செய்திலோம் என்று அவளைக் கொண்டாடி,
தன்னை நிந்தித்துத் திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனன்றோ? அப்போது சபையில் பிறந்த பரிபவம்
நீக்கப்பட்டிருந்தும், ‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங்காட்டப் பெற்றிலோம்’
என்று தான் உள்ளதனையும் இழவுபட்டிருந்தான் என்றபடி. ‘இழவுபடுகிறது என்? காரியம் செய்யப்படவில்லையோ?’
எனின், 3‘நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு
ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான். ‘ஆயின், கிருஷ்ணனையொழியவும் திருப்பெயரே காரியம்
செய்யவற்றோ?’ எனின், பொருத்தமில்லாமல் இரண்டு சொற்களைச் சேர்த்துச் சொல்ல அது விஷத்தைப்
போக்குதற்குக் காரணம் ஆகாநின்றதே சொற்களின் சத்தியால்? அதைப் போன்றும் போராமை இல்லையன்றே
திருநாமம்?
‘வேங்கடத்துறைவார்க்கு
நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ எனக் கூட்டுக.
(6)
___________________________________________________
1.
யஜூஷி
2. ‘நினைத்திருக்கை மாத்திரமன்றி,
அநுஷ்டானமும் உண்டு,’ என்கிறார்,
‘திரௌபதி’ என்று தொடங்கி. இது,
பாரதம் உத்தியோக பர்.
58 : 22.
3. ‘வாச்யப் பிரபாவம்
போல அன்று, வாசகப் பிரபாவம்’, ‘அவன்
தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்றுதவும்’, ‘திரௌபதிக்கு
ஆபத்திலே
புடைவை சுரந்தது திருநாமமிறே’ என்பன
முமுட்சுப்படி, 14-16.
|