|
251
251
சுமந்து மாமலர்
நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர்
வானவர் கோனொடும்
நமன்றுஎ ழும்திரு வேங்கடம்
நங்கட்குச்
சமன்கொள் வீடு
தரும்தடங் குன்றமே.
பொ-ரை :
நித்தியசூரிகள்,
சேனை முதலியாரோடும் வந்து சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப்புகையையும் தாங்கிக்கொண்டு
வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாகவுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய பெரிய
மலையாகும்.
வி-கு :
‘மா மலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு’ என மாறுக. நமன்று - வணங்கி.
ஈடு : ஏழாம்
பாட்டு. ‘முதற்பாசுரத்தில் பிரார்த்தித்த கைங்கரியத்தைத் திருமலை தானே தரும்,’ என்கிறார்.
‘‘வீடு தரும்’ என்றால், ‘மோக்ஷத்தைத் தரும்’ என்பதன்றோ பொருளாம்? கைங்கரியத்தைத் தரும்
என்று பொருள் கூறல் பொருந்துமோ?’ எனின், கைங்கரியம் என்பது, 1பகவானை
அடைதலுக்குப் பலமாய் வருவதாதலின் பொருந்தும்.
சுமந்து மா மலர்
நீர் சுடர் தூபம் கொண்டு - ‘மா மலர் நீர் சுடர் தூபம் இவற்றைச் சுமந்துகொண்டு’ என்னவுமாம்.
அன்றி, ‘மா மலர் சுமந்து, நீர் சுடர் தீபம் கொண்டு’ என்னவுமாம். ஆக, 2‘ஒரு
கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சார்த்தியருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம்
பண்ணியருளக்கடவனே!’ என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின்,
‘சுமந்து’ என்கிறார். இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின்,
‘சுமந்து’ என்கிறார் என்னுதல். 3ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு
___________________________________________________
1. ‘காரிய காரண
உபசாரத்தால் அருளிச்செய்தார்’ என்றபடி.
2. ‘புனைந்த கண்ணி
நீர் சாந்தம் புகையோடேந்தி வணங்கினால்’ என்றதற்கு
எழுதியுள்ள வியாக்கியானத்தை நினைவு கூர்க.
(முதற்பத்து, பக் 176-177.)
3. அனுகூலன் இட்டது
கனத்துத் தோன்றும் என்பதற்குச் சம்வாதம்,
‘ஸ்ரீபுருஷோத்தமமுடையானுக்கு’ என்று தொடங்கும்
வாக்கியம்.
ஸ்ரீபுருஷோத்தமம் - ஒரு திவ்விய தேசம்.
|