|
அரச
அரசகுமாரன் செண்பகப்
பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், ஸ்ரீ புருஷோத்தமமுடையான்
செண்பகம் உகந்து அணிவர்; அரச குமாரர்கள் சிலர், செண்பகங்கொண்டு சார்த்துவதற்குத் தேடி,
கடைகளிலே சென்று பார்க்க, ஒரு பூ இருக்கக் கண்டு, அப்பூவுக்கு ஒருவர்க்கொருவர் செருக்காலே விலையை
மிகமிக ஏற்ற, அவர்களிலே ஒருவன் நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை
வாங்கிக்கொண்டு வந்து சார்த்தினான்; அன்று இரவில் அவனுடைய கனாவில், ‘நீ இட்ட பூ எனக்குக்
கனத்துச் சுமக்க முடிகிறதில்லை,’ என்று அருளிச்செய்ததைக் குறித்தபடி. அமர்ந்து வானவர் வானவர்
கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் - நித்தியசூரிகளும் சேநாபதியாழ்வானும் பொருந்தி இப்படி
ஆராதனைக்கு வேண்டிய பொருள்களைக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடம். இனி, ‘வானவர் வானவர்
கோன்’ என்பதற்கு, ‘தேவர்களும் தேவர்கட்குத் தலைவனான பிரமனும்’ என்று பொருள் கூறலுமாம்.
1இவர்கள் வேறு பலன்களை விரும்புகின்றவர்களாயினும், சேர்ந்த நிலத்தின் தன்மையாலே
2அநந்யப் பிரயோஜனர்களாக மாறுகிறார்களாதலின், ‘அமர்ந்து’ என்கிறார்.
இப்படிச் சமாராதன உபகரணங்களைக் கொண்டு வணங்கி எழுவர்களாயிற்று. ‘துயரறு சுடரடி தொழுது எழு’
என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.
நங்கட்கு - கைங்கரிய
ருசியையுடைய நமக்கு. சமன் கொள் வீடு தரும் - 3‘பிரஹ்மத்தையறிந்தவன் பிரஹ்மம்போல
ஆகிறான்,’ என்றும், 4‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’
என்றும், 5‘இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’
என்றும், 6‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ என்றும் சொல்லுகிறபடியே, அவன்,
‘அவனோடு
___________________________________________________
1. இவர்கள் - பிரமன்
முதலிய தேவர்கள்
2. அநந்யப் பிரயோஜனர்
- வேறு பலன்களை விரும்பாதவர்கள்.
3.
முண்டக உபநிட, 3 : 2.
4. முண்டக உபநிட.
3. 1 : 3.
5. ஸ்ரீ கீதை, 14 :
2.
6. பெரிய திருமொழி,
11. 3 : 5.
|