முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
98

ஒத

ஒத்ததாகையாகிற மோக்ஷத்தைத் தரும்’ என்னுதல்; 1‘இவ்வாத்துமாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே, ‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும் என்னுதல்; இனி, ‘திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது, ‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது? அப்படியே 2‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம். தடங்குன்றம் - திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை. 3‘ஸீபக: - வீறுடைத்தாயிருக்கை. கிரிராஜ உபம: - திருமலையோடு ஒத்திருக்கை. யஸ்மிந்வஸதி - அதற்கு ஏது சொல்லுகிறது. காகுஸ்த்த: - போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு? குபேர இவ நந்தநே - துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன் போது போக்குகைக்காகத் தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’

(7)

252

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.

___________________________________________________

1. சாந்தோக்யம்.

2. திருவாய். 2. 9 : 1.

      ‘சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்
  செய்கிறார். முதற்பொருளும், மூன்றாவது பொருளும் சாம்யாபத்தி ரூபமான
  மோக்ஷம் என்பது. இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான
  மோக்ஷம் என்பது. சமம் - ஒத்தல்; தகுதி.

3. ஸ்ரீராமா. அயோத். 98 : 12. இந்தச் சுலோகமானது, ‘தடங்குன்றம்’
  என்பதற்குத் திருஷ்டாந்தமாக எடுத்துக்காட்டப்படுவது; ‘குபேரன் தன்
  அரண்மனையை நீங்கித் துஷ்ட மிருகங்கள் நிறைந்த நந்தவனத்திலே
  போது போக்குகைக்காக உலாவுமாறு போன்று, ஸ்ரீராமபிரானும்