|
பெ
பொ-ரை :
கோவர்த்தனமென்னும் மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும்
காத்தவன்; அக்காலத்தில் உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான
இறைவன் சென்று தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலை ஒன்றையுமே வணங்க, நம்முடைய வினைகள்
நீங்கும்.
வி-கு :
‘ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம்
பிரிநிலை.
ஈடு : எட்டாம்
பாட்டு. 1‘வேங்கடங்கள்’ என்கிற பாசுரத்திற்கூறிய விரோதி போக்கலையும் திருமலையாழ்வார்
தாமே செய்து கொடுப்பர் என்கிறார். இனி, ‘ஒரு பேற்றினைத் தரல் வேண்டுமோ? திருமலையே நமக்கு
உத்தேஸ்யம்; அடிமை கொள்பவனுக்கு உத்தேஸ்யமானது அடியவனுக்கு உத்தேஸ்யமாகச் சொல்ல வேண்டுமோ?’
என்கிறார் என்னுதல்.
குன்றம் ஏந்திக்
குளிர் மழை காத்தவன் - 2‘இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள்
எல்லோரும் நோவுபட, அப்பொழுது அக்கோகுலத்தைப் பார்த்துக் கிருஷ்ணன் சிந்தித்தான்,’ என்கிறபடியே,
பசுக்களும் ஆயர்களும் மழையிலே தொலையப் புக, கண்ணுக்குத் தோன்றியதொரு மலையைப் பிடுங்கி ஏழு
நாள் ஒருபடிப்படத் தரித்துக்கொண்டு நின்று அவற்றைக் காத்தவன். 3இதனால், துக்கத்தைப்
போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு. அன்று ஞாலம் அளந்த பிரான் - ஓர்
ஊருக்கு உதவினபடி சொல்லிற்று மேல்; இங்கு நாட்டுக்கு
__________________________________________________
அயோத்தியா நகரத்தை விட்டு
நீங்கிச் சித்திரகூட பர்வதத்திலே
உல்லாசமாகச்சஞ்சரித்தான்; ஸ்ரீராமபிரான் சஞ்சரிக்கும்
காரணத்தாலே
அம்மலை திருவேங்கடமலையை ஒக்கும் பாக்கியத்தைப் பெற்றதாயிற்று’
என்பதாம். திருமலைக்குச்
சிறப்பு, பரமபதநாதன் தன்னிடத்தில் வந்து
எழுந்தருளியிருத்தல்.
1. ‘நம் வினை ஓயுமே’ என்பதற்கு அருளிச்செய்யும் பொருள் வகை
இரண்டற்கும் தகுதியாக இங்கும் அவதாரிகை இரண்டு
வகையாக அருளிச்
செய்கிறார்.
2.
ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 :
13.
3. ‘திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’ என்றதனையும்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார், ‘இதனால்’
என்று தொடங்கி.
|