முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
70

மான அடிமைகளைச் செய்ய வேண்டும். இதனால், எல்லா நிலைகளையும் நினைக்கிறது. 1‘பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’ என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்; அவ்விருவர்க்கும் பரஸ்பரம் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே. ஆக, ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்றது, எல்லாக்காலத்தையும் எல்லாத் தேசத்தையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது. 2ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால், ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்.

    வழுவிலா அடிமை செய்யவேண்டும் - அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்கவொண்ணாதாயிற்று. எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது, ‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்; ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி. ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார். 3’இந்தக் கைங்கரிய

___________________________________________________

1. ‘பிரார்த்தித்தலுக்குக் கைங்கரியம் சுகரூபமாக இருக்குமோ?’ என்னும்
  வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடையாகப் ‘பெருமாள்
  பிராட்டி’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இவ்விடத்தில் இரண்டாம்
  பத்து ஈட்டின் தமிழாக்கம் பார்க்க.

2. ஆழ்வார்க்கு இத்திருவாய்மொழியில் ஓடுகிற கைங்கரிய அபிநிவேசம்
  நிரவதிகம் என்பதற்கு ஐதிஹ்யம், ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள்
  அரையர்’ என்று தொடங்கும் வாக்கியம். ‘பிராப்த விஷயத்திலே மாறுபட்ட
  இவ்வுலகத்திலே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னிச் செய்யும்
  கைங்கரியத்தைப் பிராப்த விஷயத்தில் இவர் பாரிப்பதே !’ என்று
  ஈடுபடாநிற்பர் என்பது இவ்வைதிஹ்யத்தின் கருத்து.

3. ‘இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?’ என்றது, ‘தொழுது
  எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக
  எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.