முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
121

விடாதவன், குற்றமற்றவன் ஆன எம்பெருமானை, சாதிமாணிக்கம் என்பேனோ! ஒளியைக் கொண்ட பொன் என்பேனோ! குணம் பொருந்திய முத்தம் என்பேனோ! உயர்ந்த சாதி வயிரம் என்பேனோ! கெடுதல் இல்லாத விளக்கு என்பேனோ! உலகத்திற்குக் காரணமான அழகிய பேரொளிப் பிழம்பான பரமபதம் என்பேனோ! முதன்மை பெற்ற அழகிய பரமபுருடன் என்பேனோ! யாது என்பேன்?

    வி-கு : ‘சவி கொள்’ என்பதனை முத்தத்திற்கும் கூட்டுக. தபுதல் - கெடுதல். ‘ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனைச் சாதி மாணிக்கம் என்கோ!’ என்று கூட்டுக. ‘ஆதும்’ என்பது, ‘யாதும்’ என்பதன் மரூஉ.

    ஈடு : நான்காம் பாட்டு. நம் முதலிகளுள் ஒருவரை ஒருவன் ‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்; நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம். அதற்குக் கருத்து: பகவானினின்றும் வேறுபட்டிருக்கின்ற எல்லாப் பொருள்களுக்கும் அவனை ஒழியப் பொருளாதல், பெயரடைதல் முதலிய தன்மைகள் இல்லாமையாலே, யாதேனும் ஒரு பொருள் தோன்றும் போதும் அவனை முன்னிட்டுக்கொண்டாயிற்றுத் தோன்றுவது. சாதி குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமை போன்று, பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவேயன்றோ 1பிரமாண பலத்தாலே? ‘ஆயின், நமக்கு 2விசேடணக்கூறு ஒழிய விசேடியக்கூறு தோன்றவில்லையே?’ எனின், மற்றையோர்க்கு விசேடணக்கூறு தோன்றுகின்றமை போன்று, விசேடியம் தோன்றுகின்றபடியாயிருக்கும் இவர்களுக்கு. ‘ஆயின், இவர்களுக்கு விசேடணக் கூற்றில் கருத்து இல்லையோ?’ எனின், விசேடணக் கூற்றிலே தாத்பர்யமின்றிக்கே

___________________________________________________ 

1. ‘யஸ்ய ஆத்துமா சரீரம் யஸ்ய பிருதிவீ சரீரம்’ என்னும் பிரமாணத்தைத்
  திருவுள்ளம் பற்றிப் ‘பிரமாண பலத்தாலே’ என்றருளிச்செய்கிறார்.

2. விசேடணக் கூறு - இறைவனுக்குப் பிரகாரமாக இருக்கிற உலகத்துப்
  பொருள்கள். விசேடியம் - பிரகாரியான இறைவன். ‘விசேடணக் கூற்றிலே
  தாத்பர்யம் இன்றிக்கே இருக்குமதுவுமன்றிக்கே’ என்றது, ‘மாயாவாதிகளைப்
  போன்று விசேக்ஷண அமிசத்தில் தாத்பர்யமின்றிக்கே இருக்கையன்றிக்கே,
  விசேஷண விசேஷ்யங்களிரண்டிலும் தாத்பர்யம் உண்டாயிருக்கச்செய்தே
  விசேஷ்யப் பிரதாநராயிருப்பர்,’ என்றபடி. ‘உலகம் பொய்’ என்பது
  மாயாவாதிகள் கொள்கை.