முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
153

New Page 1

கும்,’ என்னுமிடம் பிரசித்தமன்றோ? 1யானையின் இடரைப் போக்கின விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி. எம்மானை - யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்; 2ஒரு ஜன்மமாதல், ஒரு ஞானமாதல், ஒரு ஒழுக்கமாதல் ஒன்றும் இன்றியே ருசிமாத்திரமேயுடைய ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவினபடியை அநுசந்தித்து, ‘இது என்ன நீர்மை!’ என்று அதனாலேயாயிற்று இவர் அவனுக்கே உரியவர் ஆயிற்று. பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது 3மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும் வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்தில் இருக்கமாட்டாமல் விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச்செய்தார். சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் - யானைக்கு உதவின நீர்மையை வாயாலே

____________________________________________________ 

1. விசல்ய கரணி - அஸ்திர சஸ்திரங்கள் தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.
  சந்தான கரணி - அற்ற உறுப்புப் பொருந்தும் மருந்து.

  ‘மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும்
      உடல்வேறு வகிர்க ளாகக்
  கீண்டாலும்பொருந்துவிப்ப தொருமருந்தும்
      படைக்கலங்கள் கிளைப்ப தொன்றும்
  மீண்டேயும் தம்முருவே யருளுவதோர்
      மெய்ம்மருந்து முளநீ வீர
  ஆண்டேகிக் கொணர்தியென அடையாளத்
      தொடுமுரைத்தான் அறிவின் மிக்கான்.
  ‘இன்னமருந் தொருநான்கும் பயோததியைக்
      கலக்கியஞான்று எழுந்த தேவர்
  உன்னியமைத் தனர்மறைக்கு மெட்டாத
      பரஞ்சுடர்இவ் வுலக மூன்றும்
  தன்னிருதா ளுள்ளடக்கிப் பொலிபோழ்தின்
      யான்முரசம் சாற்றும் வேலை
  அன்னதுகண் டுயாவுதலும் தொன்முனிவர்
      அவற்றியல்எற் கறிவித் தாரால்,’

  என்ற செய்யுள்களை (கம்ப. உயுத். மருத்து. 27, 28) இங்கு அறிதல் தகும்.

2. ‘எம்மானை’ என்றதற்கு பாவம், ‘ஒரு ஜன்மமாதல்’ என்று தொடங்கும்
  வாக்கியம்

3. ‘மேலும் இயலைச் சொல்லச்செய்து’ என்றது, ‘எழுந்தும் பறந்தும் துள்ளாதார்’
  என்றிருக்கையாலே மேலேயுள்ள பகுதியையும் சொல்லச்செய்து என்றபடி.