முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
274

பிரளயத்திலே விழுகிறோம்,’ என்று அஞ்ச அறியாத 1மௌக்த்யம் அன்றோ இங்கு?’ என்றபடி. எந்தை பிரான் - 2அகடித கடநா சாமர்த்யத்தாலே என்னைத் தோற்பித்த உபகாரகன்.

    அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோம் - 3‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான ஈசுவரன்’ என்கிறபடியே, இறைமைத்தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று, அடிமையாம் தன்மைக்குத் தமக்கு அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார். ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திர பதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று, இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார். இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்; பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம். ‘இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் - எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின், ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

(10)

299

       அடிஓங்கு நூற்றுவர் வீயஅன்று
          
ஐவர்க்கு அருள்செய்த
       நெடியோனைத் தென்குரு கூர்ச்சட
           கோபன்குற் றேவல்கள்
       அடிஆர்ந்த ஆயிரத் துள்இவை
           பத்து,அவன் தொண்டர்மேல்
       முடிவு;ஆரக் கற்கில் சன்மம்செய்
           யாமை முடியுமே.

_____________________________________________________

1. மௌக்த்யம் - அறிவில்லாத இளமை. 

2. அகடித சடநா சாமர்த்தியம் - செயற்கரியனவற்றையும் செய்து முடிக்கும்
  ஆற்றல்.

3. ஸ்வேதா. உப. 6.