முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
24

பெ

    பொ-ரை : ‘மழுங்குதல் இல்லாத கூர்மையான நுனியையுடைய சக்கரத்தைச் சிறந்த வலத்திருக்கையிலேயுடையவனாகி, தொழுகின்ற அன்பையுடைய யானையைக் காக்கும்பொருட்டுக் கருடப் பறவையினையூர்ந்து வந்து தோன்றினையே! அங்ஙனமிருக்க, குறைதலில்லாத ஞானத்தையே கருவியாகக் கொண்டு, பரந்த உலகத்திலே உனக்கு அடிமைப்பட்ட அடியார்கட்குத் திருவருள் செய்தால் உனது பேரொளியானது மறையாதோ!’ என்கிறார். ‘மறையும்’ என்றபடி.

    வி-கு : ‘வலத்தையாய் அளிப்பான் ஊர்ந்து தோன்றினை,’ என முடிக்க. தொழும்பு - அடிமை.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1’பேசவொண்ணாதது மேன்மைதானோ? நீர்மையும் பேச்சுக்கு நிலமன்று,’ என்கிறார்.

    மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் - மழுங்குதலில்லாத கூரிய முனையையுடைய திருவாழியை 2’வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி’ என்கிறபடியே, வலவருகே உடையையாய். பகைவர்களின் உடல்களிலே படப்படச் சாணையிலே இட்டாற்போன்று புகர் பெற்று வருமாதலின், ‘மழுங்காத வைந்நுதிய’ என்கிறார். நல்வலத்தையாய்த் தொழுங்காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே - ‘துன்பப்பட்டவனுடைய துன்ப ஒலி செவிப்பட்டவாறே தன்னை மறந்தான்; கையில் திருவாழியிருந்தது அறிந்திலன்; அறிந்தானாகில், இருந்தவிடத்தேயிருந்து அதனையேவிக் காரியம் கொண்டிருப்பான்,’ என்பார், ‘வலத்தையாய்த் தோன்றினையே’ என்கிறார். ‘அறிந்தாலும் இருந்தவிடத்தேயிருந்து துக்கத்தைப் போக்கவொண்ணாது,’ என்பார், ‘தொழுங் காதற்களிறு’ என்கிறார். கையுந்திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கும் களிறு ஆதலின், ‘காதல் களிறு’ என்கிறார். 3’சதுர்த்தந்தி’ என்னுமாறு போன்று, காதல் இதற்கு நிரூபகமாக இருக்கிறபடி. இதன் கையில் பூ செவ்லியழியாமல் திருவடிகளில் இடுவித்துக்கொண்டானாதலின் ‘அளிப்பான்’ என்கிறார். திருவடியின் வேகம் நினைவிற்கும்

____________________________________________________

1. மேல் பாசுரத்தின் பொருளை அநுவதித்து இப்பாசுரத்தின் கருத்துப்
  பொருளை அருளிச்செய்கிறார். ‘பேசவொண்ணாதது’ என்று தொடங்கி.

2. திருப்பல்லாண்டு, 2.

3. சதுர்த்தந்தி - நான்கு தந்தங்களையுடைய யானை; ஐராவதம்.