முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
4

இத

    இத்திருவாய்மொழி துள்ளலோசையிற்சிறிது வழுவி, நாற்சீர் நாலடியால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாகும்; கலிவிருத்தமுமாம்.

 

    ஈடு : முதற்பாட்டில், அழகருடைய திவ்விய அவயவங்கட்கும் திரு அணிகலன்களுக்கும் உண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.

 

    முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ - 1உன்னுடைய திருமுகத்திலுண்டான ஒளியானது திருமுடியின் ஒளியாய்க்கொண்டு மலர்ந்ததுவோ! உன்னுடைய திருமுடியின் பேரொளியானது திருமுகத்தின் பேரொளியாய்க் கொண்டு மலர்ந்ததுவோ! 2சேஷபூதனுக்கு முற்படத்தோற்றுவது, தன்னுடைய சேஷத்துவத்திற்கு எதிர்த்தொடர்புடைய இறைவனுடைய சேஷித்துவமேயாதலின், அச்சேஷித்துவத்திற்கு அறிகுறியான திருமுடியை முன்னர் அனுபவிக்கிறார். அடிச்சோதி 3நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ - திருவடிகளின் பேரொளியானது தேவர் நின்ற ஆசனமான தாமரையாய்க்கொண்டு மலர்ந்ததுவோ! ஒரே தன்மையனான இறைவனும் நீரிலே நின்றாற்போன்று ஆதரித்து நிற்கின்றானாதலின், ‘நீ நின்ற’ என்கிறார். 4இறைவனுடைய சேஷித்துவத்திற்குப் பிரகாசமான திருமுடியின் அழகு திருவடிகளிலே போர வீசியது: ஆதலின், திருமுடியின் அழகினை அனுபவித்தவர் அதனையடுத்துத் திருவடியின் அழகினையனுபவிக்

____________________________________________________
1. உலகத்தில் மக்களுக்கு ஆபரணங்களாலே அவயவங்கட்கு அழகும் ஒளியும்
  உண்டாம் : இங்கு அவயவங்களாலே ஆபரணங்கட்கு ஒளி உண்டாகிறது
  என்பது தோற்றுகிறது. ‘மலர்ந்ததுவோ’ என்றதிலுள்ள ஓகாரம்
  ஜயப்பொருளது; ஆதலின், அதற்கு மறுதலையான பொருளையும் அருளிச்
  செய்கிறார், ‘உன்னுடைய திருமுடியின் பேரொளியானது’ என்று தொடங்கி.

2. ‘சேஷத்துவத்துக்குத் தகுதியாகத் திருவடியை அனுசந்திக்காமல் முற்படத்
  திருமுடியைச் சொல்லுவான் என்?’ என்னும் வினாவிற்கு விடையாகச்
  ‘சேஷபூதனுக்கு முற்படத் தோற்றுவது’ என்று தொடங்கி அருளிச்
  செய்கிறார்.

 

3. மலர்ந்த தாமரை நீரிலே செவ்வி பெறுமாறு போன்று, திருவடிகளும்
  ஆசனபதுமத்தினது சம்பந்தத்தாலே செவ்வி பெற்று வருகிறது என்றபடி. 

4. திருமுடியின் அழகினை அனுபவித்தவர் அதனையடுத்துத் திருவடியின்
  அழகினை அனுபவிப்பதற்குக் காரணத்தை
  அருளிச்செய்கிறார்,‘இறைவனுடைய’ என்று தொடங்கி.