முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
45

கெ

கொலோ வருகின்றது!’ என்னும்படியன்றோ அவன் வரவுதான் இருப்பது? எந்தாய் - பாண்டவர்கட்கு அன்று உதவி செய்ததும் தமக்கு என்று இருக்கிறார்.

    பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா - சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்ற பாவங்களை அறுக்க முடியா. நீ அழியச்செய்த துரியோதனன் முதலியோர்கள் அளவன்றுகாண் இதன் 1தண்மை; அநுகூலம் போலே இருந்து பாதகமாமன்றோ இது? தன்பக்கல் இனிமைப்புத்தியைப் பிறப்பித்து, ஈசுவரனுடைய இனிமையை அவமதிக்கச் செய்யும். பெரியோர்கள் ஒருவனிடத்தில் குற்றங்கள் பல உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே? அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார். இராவணன் தலைகள் போன்று முளையாநிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார். இனி, புணர்வினை என்பதற்குச் சரீர சம்பந்தந்தன்னை என்னுதல். யான் - சிறையிலே கிடப்பாரைப் போன்று பிரகிருதியோடே பிணையுண்டிருக்கிற நான். உன்னை - ஒரு தேச விசேடத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் உன்னை. சார்வது ஓர் சூழ்ச்சி சொல்லாய் - இதனைக் கழித்து நான் உன்னைக் கிட்டுவதொரு விரகு அருளிச்செய்ய வேண்டும். நான் அறியில் தப்புவன்; நான் அறியாதபடி விரகு பார்க்க வேண்டும்; அதுதன்னை எனக்குச் சொல்லவும் வேணும் என்பார், ‘சூழ்ச்சி சொல்லாய்’ என்கிறார். அதாவது, 2‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கிறேன்; நீ துக்கப்படாதே!’ என்று அருளிச்செய்யவேண்டும் என்றபடி.

(3)

237

சூழ்ச்சி ஞானச்
    சுடர்ஒளி யாகிஎன்றும்
ஏழ்ச்சி கேடுஇன்றி,
    எங்கணும் நிறைந்தஎந்தாய்!
தாழ்ச்சிமற்று எங்கும்
    தவிர்ந்து,நின் தாள்இணைக்கீழ்
வாழ்ச்சியான் சேரும்
    வகைஅரு ளாய்வந்தே.

_____________________________________________________

1. தண்மை - தாழ்மை. தண்ணியன் - தாழ்ந்தவன்.
2. ஸ்ரீ கீதை, 18 : 66.