முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
55

    ஈடு : எட்டாம் பாட்டு. 1சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ என்கிறார்.

    மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் - 2எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே, இவ்வாத்துமாவோடு பிரிக்கவொண்ணாதபடியிருப்பதாய், துக்கத்தை விளைப்பதாயிருக்கிற பாவங்களைத் 3‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே, விதித்தனவான கர்மங்களைச் செய்வதனாலே போக்கிற்றிலேன். ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் - 4‘இடைவிடாது தியானம் செய்வதனால் அறியத் தக்கவன்’ என்கிறபடியே, எப்பொழுதும் தியானித்து உன்னை நேரே காணுவதற்கு விரகு பார்த்திலேன். ‘ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார். ‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவசரம் இல்லை,’ என்னுமாறு போன்று, 5‘இந்திரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் நன்மை பார்த்திலேன்,’ என்கிறார் என்றபடி. ‘இங்ஙனமிருக்க, உன்னை நினைத்தவாறே விடமாட்டுகின்றிலேன்’ என்கிறார் மேல்.

    பாவு தொல் சீர்க் கண்ணா - 6‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே. 7விரும்பாதார் கூட்டத்திலும் பிரசித்தமான

____________________________________________________

1. முன் இரண்டு அடிகளையும் நான்காமடியையும் திருவுள்ளம் பற்றி
  அவதாரிகை அருளிச் செய்கிறார்.

2. ஸ்ரீரங்க கத்யம்

3. தைத்திரீயம்

4. பிருகதாரண்ய உபநிட. 4 : 5.

5. ‘சருகு அரிக்க நேரமன்றிக் குளிர் காய நேரமில்லாத் தன்மைதானே’        
  (தண்டலையார் சத.) என்றது இங்கு ஒப்புநோக்கத் தகும்.

6. ஸ்ரீராமா. சுந். 21 : 20. இச்சுலோகத்தின் பொருள் முழுதினையும் ஈண்டுத்
  தருகிறேன்: ‘பெருமாள் நியாயம் அறிந்தவர்; சரணம் புகுந்தவரிடத்தில்
  அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர். ஆதலால், நீ பிழைத்திருக்க
  விரும்புவாயாகில், உனக்கு அவரோடு நட்பு உண்டாகட்டும்,’ என்பது.

7. ‘இகல்வினை மேவலையாகலின் பகைவரும், தாங்காது புகழ்ந்த தூங்குகொளை
  முழவின், தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே’ (பதிற். 43. 29-31)
  என்பது ஒப்பு நோக்கத்தகும்.