முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
56

இயல

இயல்பான கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணனே! 1என் பரஞ்சுடரே - எல்லா விதத்தாலுமுண்டான ஏற்றத்தினை எனக்கு அறிவித்தவனே! இனி, ‘கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’ என்னுதல்; ‘பரஞ்சுடரே உடம்பாய்’ என்னக் கடவதன்றோ? காண்பான் கூவுகின்றேன் - ஒரு சாதனத்தைச் செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று, காண வேண்டும் என்று கூப்பிடுகிறேன். எங்கு எய்தக் கூவுவன் - ‘ஒரு கொசுக்கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?

(8)

242

கூவிக் கூவிக் கொடுவினைத்
    தூற்றுள்நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத்து,
    அலமருகின்றேன்;
மேவிஅன்று ஆநிரை காத்தவன்,
    உலகம்எல்லாம்
தாவிய அம்மானை எங்குஇனித்
    தலைபெய்வனே?

    பொ-ரை : கொடிய பாவங்கட்கு இருப்பிடமான சமுசாரமான புதரில் நின்றுகொண்டு பல காலம் வழியறியாமல் கூவிக்கூவிச் சுழலுகின்ற பாவியேனாகிய யான், அக்காலத்தில் பொருந்திப் பசுக் கூட்டங்களைக் காத்தவனும் உலகங்களையெல்லாம் தாவி அளந்த தலைவனுமான இறைவனை இனி எங்கே கிட்டுவேன்?

____________________________________________________

1. ‘பரஞ்சுடர்’ என்பதறகு ‘எல்லா வகையாலும் உண்டான ஏற்றத்தையுடையவன்’
  என்றும், ‘வடிவழகினையுடையவன்’ என்றும் இரண்டு பொருள்
  அருளிச்செய்கிறார்.

      ‘கண்ணா!’ என்றதனால் தாழ நிற்றலும், ‘பரஞ்சுடரே!’ என்றதனால்
  வடிவழகும், ‘என்’ என்றதனால் தமக்கு முற்றூட்டாக்குதலும் போதரும். மூற்று
  ஊட்டு ஆக்குதல் - பூர்ணாநுபவம் உள்ளதாகச் செய்தல்.

      இப்பாசுரத்தில், மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால்
  கர்மயோகம் இன்மையையும், ‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’
  என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று. உபலக்ஷணத்தால்
  ஞானயோகம் இன்மையையும் கொள்க.