முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
71

மநோரதம் முன்பும் உண்டன்றோ? இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பரியந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார். 1கைங்கரிய மநோரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார். 2‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு 3ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்; இனி, 4‘சுவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால், 5‘சுவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்; இனி, சுவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்

___________________________________________________

1. ‘அடிமை செய்தும்’ என்னாமல், ‘அடிமை செய்ய வேண்டும்’ என்றதற்கு
  பாவம், ‘கைங்கரிய மனோரதமே’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. கைங்கரியம், மநோரதமே பிடித்து உத்தேசியமாகைக்குக் காரணம், பிராப்ய
  வைலக்ஷண்யம் என்று கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு மாறுபட்ட
  மற்றைப் புருஷார்த்தங்களின் தோஷங்களை விளக்கிக் கூறுமுகத்தால் பிராப்ய
  வைலக்ஷண்யத்தைக் காட்டுகிறார், ‘சிற்றின்பம்’ என்று தொடங்கிச் ‘சுக
  ரூபமாயிருப்பது ஒன்றன்றோ? இது?’ என்பது முடிய.

3. ‘அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
  இன்சொல் இழுக்கம் தரும்.’

  என்னும் திருக்குறளின் (911) பொருளை ஈண்டுச் சார்த்தி நோக்குக.

4. சுவர்க்கத்தில் அனுபவிக்கும் இன்பமும் துன்பம் கலந்தது,’ என்பதனை
  விளக்குகிறார், ‘சுவர்க்க அனுபவம்’ என்றது முதல், ‘முகம் கீழ்ப்படத்
  தள்ளுவார்கள்’ என்றது முடிய. ‘அருகே சிலர் நரகானுபவம் பண்ணக்
  காண்கையாலே’ என்றது, ‘தாம் செய்த புண்ணியம் குறைந்தவாறே தமக்கு
  இனி வரப் போகின்றவற்றைக் குறித்து நினைத்து வருந்துகின்றவர்களைக்
  காண்கையாலே’ என்றபடி. உண்டது உருக்காட்டாதிருத்தல் - உணவின் நலன்
  தேகத்தில் தெரியாதிருத்தல்.

5. ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 50.

      ‘எல்லை மூவைந்து நாள்கள் உளவெனில் இமைக்கும் கண்ணும்’ என்பது
  சீவக சிந்தாமணி