முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
157

பினும் விடமாட்டேன்; அவனிடம் தோஷம் இருப்பினும் இருக்கட்டும்; இந்த விபீடணனை ஏற்றுக்கோடலைப் பெரியவர்கள் நிந்திக்கமாட்டார்கள்,’ என்னும் தானும், 1‘திரிசடை சொன்னவைகள் உண்மையாக இருக்குமேயாயின், அபயம் தந்து உங்களைப் பாதுகாக்கிறேன்,’ என்னுமவளும் கூட இருந்து எண்ணுவார்கள் ஆயிற்று. என்றது, 2‘களை பிடுங்கி அடியார்களை இரக்ஷித்தோமாம் விரகு யாதோ?’ என்று இருவரும்கூட விசாரியாநிற்பர்கள் என்றபடி.

    பண்கள் தலைக்கொள்ளப் பாடி - 3‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று, பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது, ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி. அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம். பறந்தும் குனித்து உழலாதார் - கால் தரையிலே பாவாதே கூத்தாடி, அதுவே வாழ்க்கையாகத் திரியாதார்; ‘பறந்துகொண்டு குனித்து இதுவே வாழ்க்கையாக இராதார்’ என்றபடி. மண் கொள் உலகில் வல் வினை மலைந்து மோதப் பிறப்பார் - வல்வினை மலைந்து மோத மண் கொள் உலகிற்பிறப்பார். என்றது, ‘பகவானுடைய குண அனுபவம் பண்ணும் போது ‘நாம் விகாரமில்லாதவர்களாய் இருக்கவேணும்,’ என்று குறிக்கொண்டு இறுக்குவாதம் பற்றினாற் போலே இருப்பவர்கள் 4சாதுர்த்திகம் வந்து எடுத்து எடுத்து

_____________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 58 : 44.

2. ‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
   களைகட் டதனொடு நேர்.’

(திருக்குறள். 550)

      ‘தீங்கு இழைக்கும் திருமால்’ என்பதற்குத் ‘தீங்கினைச் செய்வதற்கு
  ஆராய்கின்ற திருவோடு கூடிய மால்’ என்று பொருள் கொண்டு
  வியாக்கியாதா அருளிச்செய்யும் விசேடப்பொருள் நவில்தொறும் இன்பம்
  பயப்பது.

3. ‘பண்கள் தலைக்கொள்ளப் பாடி’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார்.

4. சாதுர்த்திகம் - ஒரு வகையான ஜூரநோய். முதற்பத்து, பக். 157. குறிப்புப்
  பார்க்க.