முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
160

மித்தனைகாணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர். 1யானையையும் சமுசாரிகளையும் காத்ததுதான் நித்தியசூரிகளைக் காத்தது போன்றதேயன்றோ? ‘ஆயர்களுடையவும் பசுக்களுடையவும் நிலை’ என்பார், ‘பசுநிரை தன்னை’ என்கிறார். ‘‘பசுநிரைதன்னைத் தொலைவு தவிர்த்த’ என்பான் என்?’ என்னில், 2பாதுகாக்கப்பட்டவர்களில் பிரதானரைச் சொல்ல வேணுமே? செய்த உபகாரத்தை அறிந்திருப்பாரைச் சொல்ல வேணுமே! ஆதலால், சொல்லுகிறது. ‘பசுக்களால் பரிகாசம் பண்ணப்பட்டவர்கள் போல இருக்கிற ஆயர்கள்’ என்கிறபடியே, ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களேயன்றோ? தொலைவு தவிர்த்த - தொலைவாவது, பசுக்களும் ஆயர்களும் மாளுதல்; ‘அங்ஙனம் ஆகாதவாறு காத்த’ என்றபடி. அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய், உதவிற்றும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘பிரானை’ என்கிறார்.

    சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் - ஒரு பிரயோஜனத்துக்காகச் சொன்னாலன்றோ ஒரு முறை சொல்லுதல் அமையும்? பயன் கருதாமல் என்பார், ‘சொல்லிச்சொல்லி’ என்கிறார். ‘ஒருகால் சொல்லிவிடுகையும் அன்று; ஒரு காலத்தில் பலகால் சொல்லிவிடுகையும் அன்று’ என்பார், ‘நின்று’ என்கிறார். ‘ஆள் கண்ட போதாக அன்றி எல்லாக்காலமும்’ என்பார், ‘எப்போதும்’ என்கிறார். தலையினொடு ஆதனம் தட்ட-தலை தரையிலே தட்டும்படி. தடுகுட்டமாய்ப் பறவாதார் - கால் தரையிலே பாவாதபடி ஆடாதார். தடுகுட்டமாவது - குணாலை; அதாவது, அடைவு கெடச் செய்யும் விகாரம். அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற - 3துக்கோர்மி பரம்

____________________________________________________ 

1. யானையைக் காத்தது, முதற்பாசுரத்தில் கூறப்பட்டது; சமுசாரிகளைக் காத்தது,
  இரண்டாம் பாசுரத்தில் கூறப்பட்டது.

2. ஆயர்களை நோக்கும்போது பசுக்களுக்கு விலக்காமை உண்டு ஆகையாலே,
  அவ்விலக்காமையாகிய முதன்மையை நோக்கிப் ‘பாதுகாக்கப்பட்டவர்களில்
  பிரதாநரைச் சொல்ல வேண்டுமே’ என்கிறார். ‘செய்த உபகாரத்தை
  அறிந்திருப்பாரை’ என்றது, பசுக்களை. ‘அறிந்துகொண்டு காரியம் செய்தற்குப்
  பசுக்களுக்கு ஞானமுண்டோ?’ என்னும் வினாவினைத் திருவுள்ளத்தே
  கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பசுக்களால் பரிகாசம்’ என்று
  தொடங்கி. இளிம்பு - சாதுரியமின்மை. ‘பசுக்களால்’ என்று
  தொடங்குவது,கிராதார்ஜீநீயம், சர்க் : 4.

3. ‘நரகத்தில் அலைகள் உளவோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே
  கொண்டு, ‘துக்கோர்மி’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். துக்க ஊர்மி -
  துக்கங்களாகிய அலைகள்.