முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
161

பரைகளையுடைய நரகத்திலே தரை காண ஒண்ணாதபடியாக அழுந்தி வருந்துகிற. வம்பர் - என்றும் ஒக்க யமதூதர்க்குப் புதியராவர். முன நாள் நலிந்தால், பிற்றை நாள் வந்து தோன்றினால், ‘முனநாள் நம்மால் நலியப்பட்டவன்’ என்று அருள் செய்யாதே, ‘மோம் பழம் பெற்றாற்போலே, ‘வாரீரோ! உம்மையன்றோ தேடித் திரிகிறது?’ என்னும்படியாவர் ஆதலின், ‘வம்பர்’ என்கிறார். வம்பு - புதுமை.

    இனி, மலையை எடுத்துக் கல் மாரி காத்து - அடியார்கள் நிமித்தமான காரியமித்தனையே வேண்டுவது; அரியன செய்தாலும் எளியதாய்த் தோன்றும். பசுநிரைதன்னை தொலைவு தவிர்த்த - ‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’ என்கிறது. பிரானை - 2நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது. சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் தலையினொடு ஆதனம் தட்டத் தடுகுட்டமாய்ப் பறவாதார் - 3‘மௌனமாக இருப்பவன், ஒன்றிலும் ஆசை இல்லாதவன்,’ என்கிறபடியே, இருக்கக்கூடிய பரம்பொருள், 4‘அலவலை வந்து அப்பூச்சி காட்டுகிறான்’ என்னும்படி அலவலை

_____________________________________________________

1. மோம்பழம் - நறுமணமுள்ள பழம்; மோந்துகொண்டே இருக்க
  வேண்டும்படியான பழம்.

2. ‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
   மலையுளே பிறப்பினும் கலைக்கவைதாம் என்செய்யும்?
   நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

  ‘சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
   நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்?
   தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

  ‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
   யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
   சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.’

(கலித். 9)

  என்னும் தாழிசை ஈண்டு ஒப்பு நோக்கலாகும்.

3. சாந்தோக்ய உபநிடதம், 3 : 4,

4. பெரியாழ்வார் திருமொழி, 2. 1 : 2. அலவலை - மிகுதியாகப்
  பேசுகிறவன்.