முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
164

அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம். 1’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.

    தொல்புகழ் பாடி - அந்தப்புரத்திலுள்ளாரைப்போன்று சொரூபத்தோடு கட்டுப்பட்டதான காதல் குணத்தைப் பாடி; 2‘நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்பவர்களேயன்றோ அவர்கள்? கும்பிடு நட்டம் இட்டு ஆடி - வணங்குவது ஆடுவது. அன்றியே, அஞ்சலியுடன் ஆடவுமாம். கோகு உகட்டு - அடைவு கேடு தலைமண்டையிட்டு, உண்டு - 3அதுவே

_____________________________________________________

1. தந் திருஷ்ட்வா - பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
  போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
  என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
  துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
  கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
  கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் - தம் திருமேனியில் ஒரு
  வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
  போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
  சுகாவஹம் - பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
  எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
  ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
  பபூவ - ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
  சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
  என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா -
  தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ - ‘வீரவாசியறியும்
  குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
  என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
  ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
  அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் - ‘ஐயர் நீர் வார்த்துக்
  கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
  ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
  என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே - யுத்தவடு உள்ள இடமெங்கும்
  திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
  பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி - சீதாபிராட்டி. பெருமாள் -
  ஸ்ரீராமபிரான்.

2. திருப்பல்லாண்டு, 2.

3. ‘உண்டு’ என்கிறார்,

  ‘உண்டற் குரிய அல்லாப் பொருளை
  உண்டன போலக் கூறலும் மரபே.’

  என்பது விதி.

(தொல். பொருள். சூ. 210).