முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
177

னுக

னுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சினேகிதனாயும் இருப்பதனால், அந்தத் தருமனுக்கு வெற்றி கொள்ள முடியாதது யாது உளது?’ என்கிறபடியே, அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது. பார் மல்கு சேனை அவித்த - பூமி நெளியும்படிக்குத் தகுதியாக மிகைத்துவந்த அசுரகூட்டங்களை விளக்கை அவித்தாற்போன்று, பிணங்காணவொண்ணாதபடி முடித்துப் போகட்ட. பரஞ்சுடரை - 1‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.

    நினைந்து ஆடி - அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங்குணத்தை அநுசந்தித்து, அவ்வநுசந்தானம் இருந்தவிடத்தே இருக்கவொட்டாமையால் ஆடி. நீர் மல்கு கண்ணினராய் - 2‘பகவானுடைய அனுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாய், மயிர்க்கூச்சோடு கூடின சரீரத்தையுடையனாய், எப்பொழுதும் பரமாத்துமாவின் குணங்களால் ஆவேசமடைந்தவனாய் இவ்விதமாய் எல்லா மக்களாலும் பார்க்கத் தக்கவனாய் இருப்பான் ஞானியானவன்,’ என்கிறபடியே, கண்ணநீரை இட்டு நிரூபிக்க வேண்டும்படியான கண்ணையுடையராய். நெஞ்சம் குழைந்து நையாதே - சரீரம் நிலை குலைதலேயன்றி மனமும் கட்டுக்குலைந்தவர்களாய் நைந்துபோகாமல். ஊன் மல்கி மோடு பருப்பார் - மாமிச அளமாம்படி சரீரத்தைப் பருக்கச்செய்து, கனத்த பிசல்களும் நெடிய வலிய சரீரங்களுமாய் இருக்குமவர்கள். உத்தமர்கட்கு என் செய்வாரே - பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்

_____________________________________________________

1. இங்குப் ‘பரஞ்சுடரை’ என்றது, ‘சாரதியாய் நின்ற நிலையால் வந்த புகழைச்
  சொல்லுகிறது’ என்றபடி.

      ‘கையுமுழவுகோலும், பிடித்த சிறுவாய்க்கயிறும், சேநாதூளி தூசரிதமான
  திருக்குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய
  வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்,’ என்னும் பகுதி ஒப்பு நோக்குக.
  (முமுக்ஷீப்படி. சரமஸ்லோகப் பிரகரணம்.)

2. விஷ்ணு தத்துவம்.