முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
190

இர

இராவணன் பிராட்டிபக்கல் 1‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் 2பிதற்றப் புக்கவாறே 3‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப்போல எண்ணப்படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து, பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? 4இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று இரக்கங்கொண்டு 5‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’

_______________________________________________ 

1. ‘கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
  சானகி யெனும்பெயர் உலகின் தம்மனை
 
ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர்
  வானரஞ் சுட்டதுஎன் றுணர்தல் மாட்சித்தோ?’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.

2. பிதற்றிய சிலவற்றைக் கம்பராமாயணம் சடாயு உயிர் நீத்த படலம், 66 முதல்
  72 முடிய உள்ள செய்யுள்களாலும், திரு நிந்தனைப் படலத்தாலும்
  உணரலாகும்.

3. ஸ்ரீராமா சுந். 22 : 16.

4. ‘கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின் றோயை
  அடுக்குமீ தடாதென் றான்ற ஏதுவோ டறிவு காட்டி
  இடிக்குந ரில்லை; உள்ளா ரெண்ணிய தெண்ணி யுன்னை
  முடிக்குந ரென்ற போது முடிவின்றி முடிவ துண்டோ?’

  என்பது கம்பராமாயணம்.

5. ஸ்ரீராமா சுந். 21 : 19.

      இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
  மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :- ‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால்
  அப்பையல் அதனைத் தனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே? அதற்காகத்
  ‘தோழமை கொள்’ என்கிறாள். தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற்
  காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்; ‘மித்ரபாவேந’ என்றும்,
  ‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும். ஸ்தாநம் பரீப்ஸதா
  - வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே?
  உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
  வேணுங்காண். எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில்
  பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ? வதஞ்சாநிச்சதா கோரம் -
  அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன்
  முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
  சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையேயாகிலும் அவரைப்
  பற்ற வேணுங்காண். த்வயா - உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு
  அவரைப் பற்றவேணும். அசௌ-உருவெளிப்பட்டாலே
  முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு; அவனுக்கும் தானே மாயாமிருகத்தின்
  பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும்
  முன்னிலையாயிருப்பரிறே. புருஷர்ஷப:- ‘நான் பண்ணின அபராதத்துக்கு
  என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை
  ஒன்றாக நினைத்திரார்காண்; அவர் புருஷோத்தமர்காண். அசௌ
  புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.