முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
205

திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி. செம்மை - செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.

(4)

282

        திரியும் காற்றொடு அகல்வி சும்பு
            திணிந்த மண்கிடந் தகடல்
        எரியும் தீயொடு இருசுடர் தெய்வம்
            மற்றும் மற்றும் முற்றுமாய்க்
        கரிய மேனியன் செய்ய தாமரைக்
            கண்ணன் கண்ணன்விண் ணோர்இறை
        சுரியும் பல்கருங் குஞ்சி எங்கள்
            சுடர்முடி அண்ணல் தோற்றமே.

   
பொ-ரை : கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடையவன், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், நித்தியசூரிகட்குத் தலைவன், சுருண்ட கரிய பலவான மயிர் முடியையும் பிரகாசம் பொருந்திய திருமுடியையுமுடைய அண்ணல், எங்களுக்காக வந்து அவதரித்த கிருஷ்ணன்; அவனுடைய தோற்றம், திரிகின்ற காற்றும் அகன்ற ஆகாயமும் திண்ணிதான பூமியும் சூழ்ந்து கிடந்த சமுத்திரமும் எரிகின்ற நெருப்பும் சூரிய சந்திரர்களும் தெய்வங்களும் மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களுமாகி இருக்கும்.

    வி-கு :
‘தோற்றம் ஆய் இருக்கும்’ என இருக்கும் என்னும் ஒரு சொல் கொணர்ந்து முடிக்க. ஓடு உருபு எண்ணுப் பொருளது. இதனை, ஏனையவற்றோடும் கூட்டுக. குஞ்சி - மயிர் முடி. ‘சுடர் முடியண்ணல் எங்கள் கண்ணன் தோற்றம்’ என மாறுக.

    ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘வாத்சல்யத்தாலே எப்போதும் விபூதியோடே கூடி மயில் தோகை விரித்தாற்போலே விபூதியோடு

____________________________________________________ 

1. ‘அண்ணல் தோற்றம் மற்றும் மற்றும் முற்றுமாய் இருக்கும்,’ என்று
  கொண்டு கூட்டி அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘வாத்சல்யத்தாலே
  எப்போதும் விபூதியோடே கூடி’ என்றது, சராசரங்கள் அனைத்தும் இறைவ