முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
207

1மூவ

1மூவகைத் துன்பங்களும் ஆறும்படி சிரமத்தைப் போக்கும்படியான திருமேனியையுடையவன். செய்ய தாமரைக் கண்ணன் - அகவாயில் வாத்சல்யத்திற்குப் பிரகாசகமான திருக்கண்களை யுடையவன். கண்ணன் - அடியார்கட்குக் கையாளாய் உள்ளவன். விண்ணோர் இறை - அந்நிலைதன்னிலே நித்திய சூரிகளுக்கு வந்து ஏத்தவேண்டும்படியான மனித உருவத்திலே பரத்துவத்தையுடையவன். சுரியும் பல் கருங்குஞ்சி - சுருண்டிருப்பதாய், அலகு அலகாக எண்ணிக்கொள்ளவற்றாய், கண்டார் கண்களுக்கு அஞ்சனம் இட்டாற்போலே குளிர்ந்திருந்துள்ள மயிர் முடியையுடையவனாய். எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றம் - வேறுபயனைக் கருதாதவர்கட்கு அனுபவிக்கத் தக்கதாய் ஆதிராஜ்ய சூசகமான ஒளியையுடைத்தான திருமுடியை உடைய சர்வேசுவரனுடைய தோற்றம். 2தோற்றம் - பிரகாசம்’ என்னுதல்; ‘அவதாரம்’ என்னுதல்.

(5)

283

        தோற்றக் கேடுஅவை இல்ல வன்உடை
            யான்அ வன்ஒரு மூர்த்தியாய்ச்
        சீற்றத் தோடுஅருள் பெற்ற வன்அடிக்
            கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்
        நாற்றம் தோற்றம் சுவைஒ லிஉறல்
            ஆகி நின்றஎம் வானவர்
        ஏற்றை யேஅன்றி மற்றொ ருவரை
            யான்இ லேன்எழு மைக்குமே.

   
பொ-ரை : தோன்றுதலும் அழிதலும் என்பவை இல்லாதவன், தோற்றக் கேடுகளையுடைய பொருள்களையெல்லாம் தனக்கு உடைமையாகவுடையவன், கர்மம் அடியாக வரும் பிறவி இல்லாதவன், ஒப்பற்ற நாசிங்க உருவமாகிச் சீற்றத்தோடு இருக்குங் காலத்தில் திருவருளைப் பெற்றவனான பிரஹ்லாதனானவன் திருவடி

____________________________________________________ 

1. மூவகைத் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப்
  பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் ஆம்.

2. பாசுரத்திற்கு அருளிச்செய்த இரண்டு வகையான அவதாரிகைக்கு ஏற்ப,
  இங்கும் ‘தோற்றம்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார். முதற்பொருள், ‘உபய விபூதி விசிஷ்டனாய்க் கொண்டு
  சாஸ்திரங்களிலே பிரகாசிப்பான்’ என்பது. இரண்டாவது பொருள், ‘உபய
  விபூதி விசிஷ்டனாய்க்கொண்டு அவதரிப்பான்’ என்பது.