முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
225

விட்டது; ‘பத்தியும் எப்பொழுதும் இருக்கின்றது; சூரரே! என்னுடைய மனமானது வேறிடத்தில் செல்லுகிறதில்லை,’ என்றனேயன்றோ திருவடி? அப்படி, கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம் மிக்கிருந்ததேயாகிலும், இவர் 1‘எத்திறம்!’ என்று ஆழங்காற்பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று. ‘ஆயின், ‘தயரதற்கு மகன்தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில், கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது. ‘ஆயின், ‘கிருஷ்ணாவதாரத்தைக்காட்டிலும் நீர்மை மிக்க இடம் அன்றோ அர்ச்சாவதாரம்?’ என்னில், 2அதற்கு முன்னரே சமாதானம் சொல்லிற்றே அன்றோ?

    விண்ணவர் கருமாணிக்கம் படம் அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர் கடல் வண்ணன் கண்ணன் - நித்தியசூரிகளுக்கு இனியனானவன், கலங்காப் பெருநகரத்தை விட்டு, பிரமன் முதலியோர்கட்கு அடையத்தக்கவன் ஆகைக்காகத் தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, அவனுடைய பரிசத்தாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம்போலே மிக்க அழகையுடையனாய், ‘அறப்பெரியன்’ என்று தோன்றும்படியாய் சிரமத்தைப் போக்கும்படியான வடிவையுடையனாய், அளவற்ற பெருமையனான கிருஷ்ணன். ‘விண்ணவர் கருமாணிக்கம்’ என்றதனால், நித்திய சூரிகளுக்கு அனுபவிக்கத் தகுந்த விக்கிரகத்தையுடையவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘பட அரவின் அணைக் கிடந்த’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து, பிரமன் முதலியோர் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே அணித்தாய் வந்து கண்வளர்ந்தருளுகிறவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘கண்ணன்’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தமையைத் 3தெரிவித்தபடி.

_____________________________________________________

1. திருவாய். 1. 3. 1.

2. ‘முன்னரே பரிகாரம் சொல்லிற்றேயன்றோ?’ என்றது, ‘ஒரே விஷயங்களில்
  ஈடுபாடுடையவர்கள் அருமையும் எளிமையும் பாரார்கள்’ என்று மேலே
  அருளிச்செய்ததனை நோக்கி.

3. ஆக, பரத்துவ வியூக விபவங்களை முறையாகக் காரணங்காட்டி
  அருளிச்செய்தபடி.