முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
286

கெ

கொடுத்து ஓதுகிறார். 1‘கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ என்னுமாறு போன்று ‘பரமபதமும் அவ்விருப்பும் என்படுகின்றதோ?’ என்றபடி. ‘கலங்காப்பெருநகரத்திற்பண்ணும் ஆதரத்தை என் நெஞ்சிலே பண்ணாநின்றான்,’ என்பார், ‘நகராக’ என்கிறார். பரமபதத்தில் 2இட்டளமும் தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார். மனத்தினை இட்டளம் இல்லாத நரகமாகக் கொண்டிருந்தான் என்றபடி. ‘மனத்தினை நீள்நகராகக் கொண்டிருந்தமையை அறிந்தபடி எங்ஙனே?’ என்ன, ‘இல்லையாகில், மறந்து 3கூப்பீடுமாறும் அன்றோ? இப்படிக் கூப்பிடப் பண்ணின உபகாரத்தின் தன்மையை நினைத்து ‘என் தஞ்சனே!’ என்கிறார். சமுசாரிகளில் இப்படிக் கூப்பிடுகின்றவர் இலர் அன்றே? இவர் நெஞ்சிலே இருக்கை அன்றோ இவ்விஷயத்திற்கூப்பிடுகிறது?

    தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே! - கட்டளைப்பட்ட இலங்கைக்கு இறைவனான இராவணனை அழித்து அவனுக்கு நஞ்சு ஆனவனே! ஒன்றுக்கும் வேறுபடாதவனான திருவடியும் இலங்கையில் கட்டளையைக் கண்டு, 4‘இது என்ன வீர்யம்! இது என்ன தைர்யம்! இது என்ன பலம்! இது என்ன ஒளி! அரக்கர் தலைவனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்!’ என்று மதித்த ஐஸ்வர்யமாதலின், ‘தண் இலங்கை’ என்கிறார். ‘தண்’ என்பது ஆகுபெயரால் கட்டளைப்பாட்டைக் காட்டுகிறது.

    ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! - மஹாபலியாலே கொள்ளப்பட்ட பூமியை மீட்கும் விரகு அறியுமவனே! இராவணன் தலையை அறுத்தது போன்று அறுக்காமல் விட்டது, கொடை என்பது ஒரு குணம் சிறிது உண்டாகையாலே. வஞ்சனை-விரகு. விரகாவது, ‘இவன் கையிலே தர்மம் ஒரு சிறிது உண்டாய் இருந்தது’ என்று ‘இவனை அழிக்காமல், அறப்பெரியவனான தன்னை இரப்பாளன் ஆக்கி இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக்

____________________________________________________

1. பெரிய திருவந். 68.

2. இட்டளம் - குறைவு.

3. ‘மறந்து கூப்பீடு மாறுமன்றோ’ என்றது, ‘நெஞ்சிலே இருக்கையாலேயன்றோ
  வாக்குக் கூப்பிடாநின்றது?’ என்றபடி.

4. ஸ்ரீராமா. சுந்த. 49 : 17.

     
இங்கு, கம்பராமாயணம் ஊர் தேடு படலத்தில் முதலிலுள்ள 41
  செய்யுள்களைப் படித்தல் தகும்.