முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
313

சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே, பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும், பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும், தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும், வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும், 1‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப் பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.

    2
அவர்களைக் கண்டவாறே, 3வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; 4பிறர் கேட்டினைக் கண்டால் அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும் கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான 5நல்வார்த்தை அருளிச்செய்ய, அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர், அவர்களில் 6தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.

    7
அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்க

____________________________________________________

1. ‘அவர்கள் தாங்கள்’ என்றது, மேலே கூறிய சைனர் பௌத்தர் சைவர்
  என்னுமவர்களை.

2. ‘அவர்களை’ என்றது, கவி பாடித் திரியுமவர்களை.

3. ‘இவ்வகை ஆற்றானாய தலைமகனது ஆற்றாமைக்குக் கவன்று முன்
  நாணிற்சென்று எய்திய ஆற்றாமை நீங்கித் தலைமகள் ஆற்றாளாயினாள்,
  ‘வேல் ஏறு படத் தேன் ஏறு மாய்ந்தாற்போல,’ என்பது இறையனார்
  களவியலுரை.

4. ‘தம்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
   வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்; - திங்கள்
   கறையிருளை நீக்கக் கருதா துலகில்
   நிறையிருளை நீக்குமேல் நின்று.’

  என்றார் பிறரும்.

5. ‘நல்வார்த்தை’ என்றது, ‘பிறரைத் துதி செய்தல் ஆகாது’ என்று
  அருளிச்செய்யும் வார்த்தையை.

6. ‘தமக்குண்டான வேறுபட்ட சிறப்பினை’ என்றது, இத்திருவாய் மொழியில்
  வருகின்ற ‘பச்சைப் பசும்பொய்கள் பேச...யான் கிலேன்’ என்பது போன்ற
  பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி.

7. இத்திருவாய்மொழியிற்சொல்லப்படுகிற பொருளை விவரிக்கிறார்
  ‘அவர்கள்தாம்’ என்றது முதல், ‘பிரீதியோடே தலைக்கட்டுகிறார்’ என்றது
  முடிய. ‘அவர்கள்தாம்’ என்னும் இதனை, ‘சர்வேசுவரனாய் உள்ள இறைவன்
  நிற்க அவனை விட்டு’ என்றும், ‘புல்லர்களைக் கவிபாடித் திரிகிறபடியைக்
  கண்டு’ என்றும் பின் வரும் வாக்கியங்களோடு கூட்டிப் பொருள் காண்க.