முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
315

கவ

    கவி பாடுகைக்கு ஈடான 1நன்மைகள் ஒன்றும் இன்றியே தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனிஇருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும் இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே 2நூறு கற்றையாதல் ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; இவன்தான் பலநாள் கூடி நெஞ்சுகன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் 3‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய், ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, 4இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு போன்றே அன்றோ கவி பாடுவது? ‘ஆனால், வருவது என்?’ என்னில், பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமே

___________________________________________________

1. ‘நன்மைகள் ஒன்றும் இன்றியே’ என்றது, ‘பாரில் ஓர் பற்றையை’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றி. ‘கொள்ளும் பயனில்லை’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றித் ‘தான் தருவது ஒன்று இல்லாமையாலே’ என்கிறார்.

2. ‘நூறு கற்றையாதல்’ என்னும் இவ்விடத்தில்,

  ‘வார்த்தை பதின்கலம் வழியில்ஓர் எண்கலம்
   கூட்டில் அறுகலம் கொடுப்பது முக்கலம்
   ஆள்கலம் போக்கிப் பதர்கலம் போக்கி
   நான்கலம் பெற்றேன் பிள்ளைகாங் கேயர்க்கே.’

  என்ற செய்யுளை நினைத்தல் தகும். பொய்த்தரவு - பொய்யோலை.

3. ‘மன்னா மனிசரை’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, அவரே மாண்டார்’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘பெறாதொழிகையன்றிக்கே’ என்பதனை,
  ‘அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை
  விளைவிக்கின்றவர்களாய்’ எனப் பின் வரும் வாக்கியத்தோடு கூட்டுக.

4. ‘இருமருங்கும் துய்யான்’ என்றது, ‘தாய் மரபினாலும் தந்தை மரபினாலும்
  தூய்மை பெற்றவன்’ என்றபடி. ‘உபய குலோத்துங்கன்’ என்பதனைத்
  தெரிவித்தவாறு. ‘இருவர்ச்சுட்டிய பல்வேறு தொல்குடி - தாயும்
  தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்று என்று மதித்த
  பலவாய் வேறுபட்ட பழைய குடியிற்பிறந்த இரு பிறப்பாளர். குடி -
  குண்டினர், காசிபர் என்றாற்போல்வன.’ (திருமுருகு. நச். உரை.)