முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
318

தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு? ஆயிருக்கவும் சொல்லுகிறேன்,’ என்கிறார்.

    அன்றிக்கே, 1‘காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ? இருந்தால் சொல்லப்படட்டும்,’ என்கிறபடியே, திருநாமத்தைச் சொன்னால் உடனே இடிவிழும் என்று வரும் கேட்டினைச் சொல்லுங்கோள்; இன்றேல் திருநாமத்தைச் சொல்லுதல் செய்யுங்கோள்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததேயாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.

    அன்றிக்கே, 2‘காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின்மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று, ஓலக்கத்திற்சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும் என் வாயாற்சொல்ல ஒண்ணாது; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ? இங்ஙனம்

____________________________________________________

1. இரண்டாவது கருத்தைக் ‘காலையிலும் நடுப்பகலிலும்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார், ‘காலையிலும் நடுப்பகலிலும்’ என்று தொடங்கும்
  பொருளையுடைய சுலோகம், ஸ்ரீ விஷ்ணு புராணம்.

2. மூன்றாவது கருத்து, சொன்னால், சொல்லுகிற தமக்கு விரோதம் உண்டாகும்
  என்பது. இதனை, இரண்டு வகையாக அருளிச்செய்கிறார்: ‘காதுகளின்
  மூலத்தில்’ என்றது முதல் ‘வார்த்தையன்று இது’ என்றது முடிய உள்ளது
  முதல் வகை. ‘காதுகளின் மூலத்தில்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
  உள்ளது. (3. 7 : 14.) சுலோகத்தின் பொருள் கீழே தரப்படுகிறது: ‘யமன்,
  கையில் பாசத்தைத் தரித்த தன் கிங்கரனைப் பார்த்துப் ‘பகவானிடத்தில்
  பத்தியுள்ள பாகவதர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்
  பாகவதர்களுக்கு எஜமானன் அலன்’ என்று அவனுடைய காதின் அடியில்
  சொன்னான் அல்லவா?’ என்பதாம்.

  ‘திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
   மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்
   சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
   தூதுவரைக் கூவிச் செவிக்கு.’

  என்றார் திருமழிசைப்பிரான்.

     
‘மன்னா மனிசரைப் பாடுதல் விலக்கத் தக்கது’ என்பதாகச்
  சொன்னாலும் தண்டதரனான சர்வேசுவரன் திருவுள்ளத்திற்கு
  விரோதமாகையாலே தமக்கு விரோதம் என்பது முதல் வகையின் கருத்து.
  ‘சர்வேஸ்வரனைத் தவிர மற்றைய விஷயங்கள் விலக்கத் தக்கன’ என்பதாகச்
  சொன்னாலும் வாய்