அவக
அவகாசமும் அதுவே; திரிபு
உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’ என்ப ஆதலின், ‘காலம்
பெற’ என்கிறார் என்னலுமாம்.
சிந்தித்து -
“இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்;
நெஞ்சிலே 1அடி பட நினைக்க அமையும்’ என்றபடி. உய்ம்மின் - அந்த நினைவு பலத்தோடே
கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது. 2‘அந்தப் பகவானை நினைப்பதில்
என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்; இரவு பகல் எந்நேரத்திலும்
அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக ‘உய்ம்மின்’ எனப்
பன்மையாக அருளிச்செய்கிறார். தாள் சிந்தித்து உய்ம்மின் - 3அடி அற்றால்
வாடும் அத்தனையே அன்றோ? ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
(1)
334
‘உய்ம்மின் திறைகொணர்ந்து’
என்றுஉலகு
ஆண்டவர் இம்மையே
4தம்மின்
சுவைமட வாரைப்
பிறர்கொள்ளத்
தாம்விட்டு
வெம்மின் ஒளிவெயில்
கானகம்
போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித்திரு
மாலை
விரைந்துஅடி சேர்மினோ.
_____________________________________________________
1. ‘அடிபட’ என்பது,
சிலேடை : ‘திருவடிகள் படும்படி’ என்பதும், ‘பயில’
என்பதும் பொருள்.
2. ஸ்ரீ விஷ்ணு புரா.
1. 17 : 78.
3. ‘அடியற்றால்’ என்பது,
சிலேடை : திருவடிகளும் மூலமும் என்பது
பொருள்.
4. ‘யானை எருத்தம்
பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும்
- ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாங்
கொண்ட
மனையானை மாற்றார்
கொள.’
என்பது நாலடியார்.
|