க
கருவிகளைக்கொண்டு அடிமை
செய்கையன்றோ தக்கது? அப்படிச் செய்யப் பெற்றிலனேயாகிலும்’ என்றபடி.
உரை கொள் சோதித்
திரு உருவம் - 1‘சக்கரவர்த்தி திருமகன் இராச்சியத்தை ஆளுகின்ற காலத்தில்
மக்களுக்கு இராமன் இராமன் இராமன் என்று எல்லா வார்த்தைகளும் உண்டாயின; உலக முழுவதும் இராமன்
சொரூபமே ஆயிற்று,’ என்பது போன்று, 2‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருக்கிற
சோதி மயமான திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ என்னுதல்.
அன்றிக்கே, ‘மாற்றும் உரையும் அற்ற திருமேனி’ என்னுதல்; 3‘சுட்டு உரைத்த நன்பொன்
உன் திருமேனி ஒளி ஒவ்வாது,’ என்பது தமிழ் மறை அன்றோ? என்னது ஆவி மேலது - இப்படி வேறுபட்ட
சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான திருமேனிக்குத்
தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே! 4‘கலியர் சோற்றின்மேல் மனம்’ என்னுமாறு
போலே. 5‘இவர்தாம் ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் - நான் பரமாத்துமாவிற்கு
இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்,’ என்று இருக்குமவர்
அன்றோ?
(7)
1. ஸ்ரீராமா. யுத். 131
: 97.
2. ‘உரைகொள்’ என்பதற்கு
மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்:
முதற்பொருளில், உரையையுடைத்தாயிருக்கை. இரண்டாவது
பொருளில்,
உரையை வென்றிருக்கை. மூன்றாவது பொருளிலும் உரையை வென்றிருக்கை
என்பதே பொருள்.
3. திருவாய்மொழி,
3. 1 : 2.
4. ‘‘ஆவிமேலது’ என்பது,
‘தாரகம் முதலானவைகள் என் ஆத்துமாவின்
இருப்பு ஆவதே!’ என்ற பொருளைக் காட்டுமோ?’ எனின்,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘கலியர்’ என்று தொடங்கி. கலியர் - பசித்தவர்.
5. ‘இவர்தாம்
அவனுக்குத் தாரகம் ஆவரோ?’ என்ன, ‘இவர் தாம்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘அஹமந்நம்’ என்பது,
தைத்திரீய உப. பிரு. 10.
|