362
362
என்னது ஆவி மேலையாய்!
ஏர்கொள் ஏழ்உ லகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற
சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்;
என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ண மேநின்றாய்
என்று உரைக்க வல்லனே?
பொ-ரை :
‘என் உயிர்மேல் காதல் கொண்டுள்ளவனே! அழகு பொருந்தியிருக்கின்ற ஏழ் உலகங்களிலும் பரந்து
நிறைந்து எல்லாப் பொருள்களுமாகி நின்ற சோதி மயமான ஞானத்தையே வடிவாக உடையவனே! என்னுடைய
உயிரும் உன்னுடையது; உன்னுடைய உயிரும் என்னுடையது; இன்ன தன்மையிலே நின்றாய் என்று உரைக்க வல்லனோ?
வல்லவன் அல்லன்,’ என்றவாறு.
வி-கு :
மேலையாய் - விளிப்பெயர்; எச்சமாகக் கோடலும் அமையும். அப்பொழுது மேலை ஆகித் துன்னி முற்றுமாகி
நின்ற மூர்த்தி’ என இயையும். ‘வல்லனே’ என்றதில், ஏகாரம் எதிர்மறைப்பொருளது.
ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு
நிலம் அன்று,’ என்கிறார்.
என்னது ஆவி மேலையாய்
- ‘என் ஆத்துமாவைப் பெற்று அதனால் வந்த 2பிரீதி பிரஹர்ஷத்தையுடையாய்’ என்னுதல்.
அன்றிக்கே. ‘என்னைப் பெற வேண்டும் என்னும் ஆசையை உடையாய்’ என்னுதல். மேலையாய் - எச்சம்.
அன்றிக்கே, ‘என்னது ஆவி மேலையாய்!’ என்பதனை விளிப்பெயர் என்னுதல். ஏர்கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய் - ‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து
நிற்றலும் புதுக்கணித்தது என்கிறார்’ என்னுதல். அன்றிக்கே, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன்
பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப்போலே, தம்மை அகப்படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து
இருப்பவன் ஆனான் என்கிறார்’ ஆதல். இவரோடே வந்து கலந்த பின்பு உலகத்திற்குப் பிறந்த
புதுக்கணிப்பைத் தெரிவிப்பார்,
_____________________________________________________
1. பின் இரண்டு அடிகளைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. பிரீதி
பிரஹர்ஷம் - உவகையின் மிகுதி. புதுக்கணிப்பு - புதிதாக உண்டான
ஒளி.
|