முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
103

New Page 1

‘ஏர்கொள் உலகம்’ என்கிறார். ‘உண்டி உடல் காட்டும்’ என்னுமாறு போலே, 1ஆத்துமா நிறைந்தவாறே சரீரமும் புதுக்கணிக்குமே அன்றோ? உலகத்தையே உருவமாக உடையவன் அன்றோ அவன்? சாதி, பொருள்கள்தோறும் மறைந்து இருத்தல் போன்று, இறைவனும் குறைவறப் பரந்து நிற்கின்றான் ஆதலின், ‘துன்னி முற்றுமாகி நின்ற’ என்கிறார். சோதியின் உருவமான ஞானத்தையே வடிவாகவுடையன் ஆதலின், ‘சோதி ஞான மூர்த்தியாய்’ என்கிறார்.

    என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது - என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு. இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற்சிலர், 2‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன் இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க, ‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்; சர்வேசுவரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது. மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலேகாணும் சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச்செய்தார். இன்னவண்ணமே நின்றாய் - இந்த வகையிலே நின்றாய். என்று உரைக்க வல்லனே - ‘இப்படிப்பட்ட உன்னுடைய காதல் குணத்தை என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாய் இருந்ததோ?’ என்கிறார்.

(8)

363

        உரைக்க வல்லன் அல்லேன்; உன்
            உலப்புஇல் கீர்த்தி வெள்ளத்தின்
        கரைக்கண் என்று செல்வன்நான்?
            காதல் மையல் ஏறினேன்;

_________________________________________________

1. ஆத்துமா - இங்குச் சர்வேசுவரன். சரீரம் - உலகம்.

2. முதலிகள் வினா, பொருள் தன்மையைப் பற்றியது; ஸ்ரீ ஆளவந்தார் விடை,
  காதல் தன்மையைப் பற்றியது. இவன் - சேதனன். அவன் - சர்வேசுவரன்.