முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
105

    நித்தியசூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வேற்றுமை இன்றி அன்றோ 1இவ்விஷயம் இருப்பது? முற்றறிவினனாய் எல்லாவற்றையும் முடிக்கவல்ல ஆற்றலையுடையனான தான் அறியப்புக்காலும் 2தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் அன்றோ இருப்பது? 3தன்னை அறியப் புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும். புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே - எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவனாய் இருக்கிற இருப்பில் குற்றம் இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும் வடிவிற் பிறந்த ஒளியிலும் குற்றம் இன்றிக்கே இருக்கின்றவனே! அன்றிக்கே, 4‘கரை கடந்த காதல் குணம் உண்மையில் கண்ணழிவு இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும் பொய்யின்றிக்கே அத்தால் வந்த ஒளி வடிவிலே தோன்ற இருக்கிறவனே!’ என்னுதல். நல்ல மேன்மக்கள் இரைத்து ஏத்த யானும் ஏத்தினேன் - ‘நித்திய சூரிகள் பரமபத்தியை உடையவர்களாய்க் கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு ஏத்தக் காண்கையாலே யானும் ஏத்தினேன் அல்லது, யான் ஆற்றலுடையனாய் ஏத்தினேனோ?’ என்கிறார்.

(9)

364

யானும் ஏத்தி, ஏழ்உலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும், தன்னை ஏத்த ஏத்த எங்குஎய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுது மாகித் தித்திப்ப,
யானும் எம்பி ரானையே ஏத்தி னேன்,யான் உய்வானே.

    பொ-ரை : யானும் துதித்து, ஏழ் உலகங்கள் முழுவதும் துதித்துப் பின்பு அவ்விறைவன் தானும் துதித்தாலும், தன்னை ஏத்த

_____________________________________________________
1.
‘இவ்விஷயம்’ என்றது, சர்வேசுவரனை.

2. ‘தனக்கும்தன் தன்மை யறிவரி யானைத்
   தடங்கடற் பள்ளியம் மானை’

  என்பது தமிழ் மறை, 8. 4 : 6.

  ‘உன்னைநீ தானும் உணராதாய்’

  என்பது வில்லி பாரதம், கிருஷ்ணன் தூது.

3. ‘தன்னை அறியப்புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை’ என்றது, ‘யதோ
  வாசோ

  நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ’ என்ற உபநிடத வாக்கியத்தைத்
  திருவுள்ளம் பற்றி.

4. ‘கரை கடந்த’ என்றது, காதல் குணத்தின் மிகுதியைக் கூறியபடி. கண்ணழிவு
  - குறைவு.