முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
106

ஏத

ஏத்த அந்தப் புகழ் எங்கு முடிவு எய்தும்? ‘ஆயின், நீர் துதிப்பதற்குக் காரணம் என்?’ எனின், ‘யான் உய்வு பெறுவதற்காக எனக்கு உபகாரத்தைச் செய்த சர்வேசுவரனைத் தேனும் பாலும் வெல்லமும் அமுதமுமாகித் தித்திக்கும்படி யான் ஏத்தினேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘யான் உய்வான் எம்பிரானைத் தித்திப்ப யானும் ஏத்தினேன்,’ என முடிக்க. உய்வான் - வினையெச்சம்.

    ஈடு :  பத்தாம் பாட்டு. 1‘நானும், எல்லா உலகங்களும், சர்வேசுவரனும் ஒரு மிடற்றினராய் ஏத்தினாலும் ஏத்தி முடிவு பெறாத விஷயத்தை என் செல்லாமையாலே ஏத்தினேன்,’ என்கிறார்.

    2யானும் ஏத்தி - மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நானும் ஏத்துவது. ஏழ் உலகும் முற்றும் ஏத்தி - 3விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வேற்றுமை இன்றிச் ‘சிறியார் பெரியார்’ என்னாதே எல்லாரும், ஏத்துவது. பின்னையும் தானும் ஏத்திலும் - இயல்பாகவே முற்றறிவினனாய், தொடங்கின, காரியத்தைச் செய்து முடிப்பதற்குத் தகுதியான ஆற்றலையுடையனுமான தானும் ஏத்துவது. தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் - இப்படி எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தினாலும், பின்னையும் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சியாயிற்று இருப்பது விஷயம். என்றது, 4‘அந்யபரரோடு அநந்யபரரோடு அளவுடையாரோடு அளவிலிகளோடு வேற்றுமை

_____________________________________________________

1. ‘எங்கு எய்தும்? யான் உய்வான்’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார். ‘யான் உய்வானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘என்
  செல்லாமையாலே’ என்கிறார்.

2. யானும், ஏழுலகும், தானும் என்றவற்றிலுள்ள உம்மைகள் உயர்வுப்
  பொருளன.

3. விசேஷஜ்ஞர் - தத்துவ ஞானத்தையுடையவர். அவிசேஷஜ்ஞர் -
  அஃதில்லாதவர். ‘சிறியார் பெரியார்’ என்றது, மனிதர்களையும்
  தேவர்களையும். இவ்விரு வகையாரிலும் உள்ள விசேஷஜ்ஞர்
  அவிசேஷஜ்ஞர் என்க.

4. ‘ஏழுலகும்’ என்றதனை நோக்கி, ‘அந்யபரரோடு’ என்றும், ‘யானும்’
  என்றதனை நோக்கி, ‘அநந்யபரரோடு’ என்றும், ‘தானும்’ என்றதனை
  நோக்கி, ‘அளவிலிகளோடு’ என்றும் அருளிச்செய்கிறார். அந்யபரர் - வேறு
  ஒன்றிலே நோக்குள்ளவர். அநந்யபரர் - சர்வேசுவரனைத் தவிர வேறு
  ஒன்றிலும் நோக்கில்லாதவர், அளவுடையார் - ஞானமுடையவர்.