ஈ
ஈடு :
முடிவில், 1‘சர்வேசுவரனுடைய இரண்டு வகைப்பட்ட உலகங்களின் செல்வங்களும் திருவாய்மொழியைக்
கற்றவர்கள் இட்ட வழக்கு,’ என்றார்.
உய்வு உபாயம் மற்று
இன்மை தேறி - இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட
வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து. கண்ணன் ஒண் கழல்
மேல் - தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.
செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச்சடகோபன் - சிவந்த தாமரையையுடைய பழனங்களையுடைத்தாய்த்
தெற்குத்திக்கிற்குச் சிறந்ததாயுள்ள திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த. அவனுடைய காதல்
குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே 2‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும்
பழங்களையுடையன ஆகக்கடவன,’ என்கிறபடியே ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.
பொய் இல் பாடல்
ஆயிரத்துள் இவையும் பத்தும் - 3‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும்
பொய்யாக மாட்டாது,’ என்கிறபடியே, ‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும்
அடைமொழியாகக் கொள்க. ‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே 4அவ்வோபாதி
இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ? அன்றிக்கே, ‘அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன்
ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு
உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து’
என்னுதல். வையம் மன்னி வீற்றிருந்து - பூமியிலே எம்பெருமானாரைப்
_____________________________________________________
1. ‘விண்ணும் ஆள்வர் மண்ணூடே’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ஸ்ரீராமா. யுத்.
127 : 17.
3. ஸ்ரீராமா. பால.
2 : 37.
4. பக்கம். 35. குறிப்புப்
பார்க்க.
அவாப்த, சமஸ்தகாமன் -
விரும்புகிற போது எல்லாப்
பொருள்களையுமுடையவனாய் இருப்பவன்.
|