க
கிடத்தல் முதலியவற்றில்
ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது.
துழாவி - இதனால்,
பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று இம்மண்ணை
1விடமாட்டாமையும் தோன்றுகிறது. விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம்.
2தாங்கள் தெளிந்திருந்தார்களாய் ‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என்
என்பது?’ என்பர்களே, அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள்
மேல் : வாமனன் மண் இது என்னும் - ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னாநின்றாள். 3‘திருவடியிலே
பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னாநின்றாள் என்றபடி, 4‘பூமியானது
வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில்
_____________________________________________________
1. ‘விடமாட்டாமையும்’ என்ற உம்மை,
சம்பந்தங்கொண்டு விரும்புதலைத்
தழுவுகிறது. ‘பித்தத்தால் பீடிக்கப்பட்டவர் சந்தனக் குழம்பிலே
கைவைக்குமாறு போன்று, விரஹாக்கினி நலியாமைக்கு அவனது சம்பந்தம்
உள்ளதொன்றிலே கையை வைக்கிறாள்,’
என்றவாறு. இதனால், ‘சம்பந்தம்
கொண்டு விரும்பும் அளவன்றிக்கே, தனக்குத் தாரகமாக இருத்தலினாலும்
விரும்புகின்றாள்,’ என்றபடி.
2. மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘தாங்கள்’ என்று தொடங்கி.
என்றது, ‘வாமனன் சம்பந்தங்கொண்டு
துழாவுகிற என்னை ‘மயங்கினவள்’
என்று சொல்லுகிற நீங்களேயன்றோ மயங்கினார்கள்?’ என்கிறாள்
என்றபடி.
3. ‘திண்சுட ராழி யரங்கேசர்
திக்குத் திருச்செவியில்
மண்கழ லில்
சத்ய லோகம் சிரத்தில் மருத்துஉயிரில்
தண்கதிர் உள்ளத்தில்
வான்உந்தி யில்செந் தரணிகண்ணில்
ஒண்கனல் இந்திரன்
வாழ்முகப் போதில் உதித்தனரே’
என்றார் திவ்வியகவியும்.
4. பூமிக்கு வாசனை இயற்கையாய்
இருக்கவும், திருவடிகளினுடைய
சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்
‘பூமியானது’ என்று தொடங்கும் இரண்டு வாக்கியத்தாலே,
‘விண்ணொலி தழுவும்,
காற்று மேவுறும் ஒலியு மூறும்,
நண்ணுமால் ஒலியும் ஊறும்
நலந்திகழ் உருவும் செந்தீ,
தண்ணறல் ஒலியும் ஊறு
முருவமுஞ் சுவையும் சாரும்,
மண்ணிதை நான்கி னோடு
மணத்தையும் புணர்ந்து மன்னும்.’
என்பது பாகவதம்,
சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயம்.
|