ப
பிரசித்தி? ‘ஸர்வகந்த:’
என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது. 1‘அவன் இரந்து தனக்கு
ஆக்கிக்கொண்டது அன்றோ?’ என்னாநின்றாள்; 2அவனதானால் இந்திரனுக்குக் கொடுத்தது
போன்று கொடுக்க வேண்டாகாணும் இவளுக்கு; அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும். 3‘அவனது
அன்று காண்’ என்று இவளை மீட்க ஒண்ணாதே? ‘கண்கூடாகப் பார்க்கும்போதும் உங்களுக்குச் சந்தேகம்
தொடராநின்றதோ?’ என்கிறாள் என்பாள், ‘இது என்னும்’ என்கிறாள். ‘ஆயின், நேரே
காண்கின்றாளாயின், அனுபவிக்கத்தடை என்?’ எனின், இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில்
உள்ளதைப் போன்று தோன்றுகின்றதித்தனை போக்கி, மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?
விண்ணைத் தொழுது
அவன் மேவும் வைகுந்தம் என்று கைகாட்டும் - 4இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில்
உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று, வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது. நமக்கு
அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு 5‘அக்கரை,
இக்கரை’
_____________________________________________________
1. ‘திரிவிக்கிரமனது அன்றோ
மண்? ‘வாமனன் மண்’ என்கிறது என்னை?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன் இரந்து’
என்று
தொடங்கி.
2. ‘அவன் தனக்கு ஆக்கிக்கொண்டால்,
இவளுக்குப் பயன் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவனதானால்’ என்று தொடங்கும்
இரண்டு வாக்கியத்தால்.
3. ‘அவனதன்றுகாண்’ என்று
தொடங்கி மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
4. ‘விண்’ என்பதற்குப்
பரமபதம் என்றும், ஆகாசம் என்றும் இரண்டு பொருள்
அருளிச்செய்கின்றார். ‘பரமபதம் என்று
பொருளானபோது பரமபதத்தைக்
கண்ணால் காணக்கூடுமோ? ’கைகாட்டும்’ என்கிறது என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இறந்த காலத்தில் உள்ளதும்’ என்று
தொடங்கி.
5.
‘அக்கரை யென்னு மனத்தக்
கடலுள் அழுந்திஉன் பேரருளால்
இக்கரையேறி இளைத்திருந் தேனைஅஞ்
சேல்என்று கைகவியாய்’
என்பது பெரியாழ்வார் திருமொழி.
அக்கரை -
சமுசாரம். இக்கரை - பரமபதம். ‘அப்படிக் கண்ட பேர்
உளரோ?’ என்ன, ‘ஆர்ஷ்டிஷேணன்’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ஆர்ஷ்டிஷேணன் என்பவர் ஒரு முனிவர். ‘சிலர்’
என்றது,
தருமபுத்திரனை. தருமபுத்திரனுக்கு அம்முனிவர் தமது
ஆஸ்ரமத்திலிருந்து பரமபதம் காட்டினார் என்று
சரிதம் கூறும்.
|