என
என்னும்படி இவ்விடத்திலும்
அவ்விடம் அணித்தாய்த் தோன்றும். ஆர்ஷ்டிஷேணன் ஆஸ்ரமத்திலே நின்று பரமபதம் கண்டார்களே
அன்றோ சிலர்? ‘என்னோடே கலந்து அகன்ற இடம் போலே பிரிவோடே கூடி இராமல் அவன் நித்தியவாசம்
செய்யும் தேசம்’ என்பாள், ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள். ‘மேவும்
வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும்.
அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து, அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே
நடுவே தளர்ந்து, சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டாநின்றாள்
என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள். ‘பரமபதத்திலே நித்திய சூரிகள் எப்பொழுதும்
அனுபவித்துக் கொண்டிருக்க, அவர்களைப் போன்ற சம்பந்தம் நமக்கும் உண்டாயிருக்க, நாம் இழப்போமே!’
என்று தளர்ந்து தொடங்கின வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டுகின்றிலள்’ என்றபடி. அன்றிக்கே,
‘பெயர் ஒற்றுமையாலும் மேலே உள்ள தன்மையாலும் இந்த ஆகாசத்தைப் பரமபதம் என்று தொழாநிற்கும்,’
என்னலுமாம்.
கண்ணை உள் நீர்
மல்க நின்று - ‘அவதாரம் போல அன்றிக்கே என்றும் ஒக்க அனுபவிக்கலாம்படி இருக்கிற பரமபதத்தில்
இருப்பிலும், நான் இழப்பதே!’ என்று கண்ணீர் மல்காநின்றாள். கடல் வண்ணன் என்னும் - ஒரு
கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்;
அவ்வடிவினைக் காட்டிக்காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்; இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின
படியே 1சொல்லாநின்றாள் என்றபடி. அன்னே - ‘அம்மே’ என்று துக்கத்தின் மிகுதியைக்
காட்டுவதோர் இடைச்சொல். ‘மன்னே’ என்னலுமாம். என்பெண்ணை - 2‘யுவதியாயும்
குமாரிணியாயும் இருப்பவள்’ என்றபடியே, கலவியிலும் உட்புக
_____________________________________________________
1. ‘ஏற்றின படி’ என்றது,
சிலேடை : ‘ஏற்றிய திருமேனி’ என்பதும், ‘ஏற்றிய
விதம்’ என்பதும் பொருள்.
2. மேல் திருப்பாசுரத்தில்
‘சிறுமான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘யுவதியாயும்’ என்று தொடங்கி.
|