முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
119

New Page 1

தோன்றுவானே! செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் - உதயகாலத்தில் சூரியனைக் கண்டு ‘ஸ்ரீதரனுடைய வடிவு இது,’ என்பாள்.

    ‘ஆயின், செய்ய ஞாயிற்றைப் பார்த்துத் திருமாலாக மயங்கல் கூடுமோ? அவன் கடல் வண்ணன் அன்றோ?’ எனின், முழுவதும் ஒத்திருத்தல் வேண்டாதே சிறிது ஒத்திருத்தலே அமையாநின்றதாயிற்று இவள் மயங்குதற்கு. ‘அச்சிறிது ஒப்புமைதான் யாதோ?’ எனின், ஒளியையும் ஒளியையுடைய பொருளையும் கண்டவாறே, அவளும் அவனுமாக இருக்கும் இருப்பை நினையாநின்றாள். 1‘சூரியனை விட்டுப் பிரியாத ஒளியைப் போன்று, ஸ்ரீராமபிரானை விட்டு நான் பிரிந்திரேன்,’ என்பது பிராட்டியின் வார்த்தை. நையும் - 2தாய் தந்தையர்கள் சேர இருக்க, அவர்கள் அண்மையிலே பசி எடுத்து வருந்தும் குழந்தைகளைப்போலே வருந்தாநின்றாள். ‘புருஷகாரத்தைச் செய்கின்ற பிராட்டி அருகே இருக்கப் பெறாத யான், இனி யார் புருஷகாரமாகப் பெற இருக்கிறேன்?’ என்று வருந்தாநின்றாள் என்றபடி.

    கண் நீர் மல்க நின்று - 3தளர்த்தியின் மிகுதியாலே கண்ணீர் வெள்ளம் இடாநின்றது. நாரணன் என்னும் - 4‘அம்மே!’ என்பாரைப் போலே; 5‘ஸ்ரீமந்நாராயணன்’

_____________________________________________________

1. ஸ்ரீ ராமா. சுந். 21 : 15.

2. மேலே ‘அவனும் அவளுமாக இருக்கும் இருப்பை’ என்று
  அருளிச்செய்ததைத் திருவுள்ளம் பற்றித் ‘தாய் தந்தையர்கள்’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ‘நையும்’ என்றதனையும் கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார், ‘தளர்த்தியின்
  மிகுதியாலே’ என்று தொடங்கி.

4. ‘அம்மே என்பாரைப் போலே’ என்றது, சம்பந்தத்தைத் தெரிவித்தபடி.
  நாராயண சப்தத்தினுடைய பொருளைத் தெரிவித்தவாறு. நாராயணன் என்ற
  பெயரால் பெறப்படுகின்ற நவவித சம்பந்தத்தையும் இங்குக் குறிக்கொள்க.

5. ‘சிரீதரன்’ என்றதனை அடுத்து நாராயணன் என்ற பதத்தை வையாது,
  ‘நையும் கண்ணீர் மல்க நின்று’ என்றதனைக் கூறி, அதன் பின்னர்
  ‘நாராயணன்’ என்ற பதத்தை வைத்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘ஸ்ரீமந்நாராயணன்’ என்று தொடங்கி. என்றது, ‘பெரியோர்கள் ஒரு வைதிக
  காரியத்தைச் செய்யும்போது முதலில் கையைக் கழுவிக்கொண்டு
  பின்னையன்றோ அக்காரியத்தைச் செய்வார்கள்? அப்படியே, இவள்
  முந்துறக் கண்ணீர்விட்டு, பின்னர் அப் பெயரைச் சொல்லாநின்றாள்,’
  என்றபடி.