உள
உள்ள பெண்களை எல்லாம்
திரட்டுமே? இவன் திரட்டினபடியே வேறு ஒருவன் வந்து கைக்கொள்ளும்,’ என்றபடி. இது, 1நரகபுரம்
அழிந்த அன்று கண்டதே அன்றோ? பாண்டவர்களுடைய இராஜசூயமும் செருக்கும் எல்லாம் கிடக்க, திரௌபதி
சபையிலே மானபங்கம் அடைந்த அதுவே அன்றோ இதில் பிரமாணம்? தாம் விட்டு - தம்முடைய உயிரைப்
பாதுகாத்துக் கொள்ளுவதில் உண்டான நசையாலே, மனம் அறியத் தாங்களே 2கூறைப்பையும்
சுமந்துகொண்டு போய் விட்டுப் போவர்கள்; 3‘ஆபத்தின்பொருட்டுச் செல்வத்தைச்
செலவு செய்யாமல் காக்கக் கடவன், அப்பொருள்களைச் செலவு செய்தாகிலும் மனைவிமார்களைக்
காக்கக் கடவன், அம்மனைவிமார்களைக்கொண்டும் அப்பொருள்களைக்கொண்டும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்
கடவன்,’ என்றார் பிறரும்.
வெம் மின் ஒளி
வெயில் கானகம் போய் - பேய்த்தேரையும் வெயிலையும் உடைத்தான காட்டிலே போய். அன்றிக்கே,
‘வெவ்விய மின்னின் ஒளி போலே இருந்துள்ள வெயிலையுடைத்தான காட்டிலே போய்’ என்னுதல். என்றது,
‘பின்னையும் இவன் இங்கே காணில் நலியும்’ என்று தண்ணீர் அற்றதாயும் மனித சஞ்சாரம் இல்லாததாயும்
இருக்கின்ற காட்டிற்குச்செல்லும்’ என்றபடி. குமைதின்பர்கள் - நலிவுபடுவர்கள்; என்றது, 4செல்வம்
உடையவர்களுக்கு எங்கும் ஆள் ஓடுமே? ‘அவன் போன இடத்தே போய்க் கொன்று வருகிறோம்; 5எங்களுக்கு
வெற்றிலை
_____________________________________________________
1. பிறர் கொண்டதற்கு
உதாரணம், ‘நரகபுரம் அழிந்த அன்று’ என்று
தொடங்கும் வாக்கியம். நரகபுரம் - நரகாசுரனுடைய
நகரம். மற்றும் ஓர்
உதாரணம் காட்டுகிறார், ‘பாண்டவர்களுடைய’ என்று தொடங்கி.
2. கூறைப்பை -
உடை வைத்துள்ள பை. கூறை - உடை.
3. ‘தான் கொண்டு
போய் விடவேண்டுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக
‘ஆபத்தின்பொருட்டு’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
4. ‘ஈட்டி எட்டினவரையில்
பாயும்; பணம் பாதாளம் வரையிலும் பாயும்,’
என்பது பழமொழி.
5. ‘வெற்றிலை இட்டருளீர்
என்றது, ‘உதவி செய்து உத்தரவுகொடுத்து
அனுப்பவேண்டும்,’ என்றபடி.
|