என
என்றுகூடச் சொல்ல மாட்டாதே
தளர்ந்து, கண்ணீராலே கைகழுவி, பின்னர் ‘நாரணன்’ என்னாநின்றாள். அன்னே - 1‘மைத்ரேய!’
என்னுமாறு போலே, தனக்கு ஓர் ஊற்றங்கோல் தேடுகின்றாள். என் தெய்வ உருவின் - ஒப்புமையுள்ள
பொருள்களையும் நினைக்க நினைக்க, நித்தியானுபவம் பண்ணுகின்ற நித்திய சூரிகள் வடிவில் பிறக்கும்
2ஒளி பிறவாநின்றதாயிற்று இவளுக்கு; ஆதலின், ‘தெய்வ உருவின்’ என்கிறாள்.
ஆயின், அவர்களில் இவளுக்கு வாசி உண்டு; சிறுமான் - 3‘புராணா: - பழையர்’ என்றும்,
4‘விண்ணாட்டவர் மூதுவர்’ என்றும் சொல்லுகின்றபடியே, பழையராய் இருப்பார்களே அன்றோ
அவர்கள்? செய்கின்ற ஒன்று அறியேனே - ‘இவள் தொடங்குகிறது எது? தலைக்கட்டுகிறது எது?’ என்று
5ஒன்றும் தெரிகின்றது இல்லை.
(2)
368
அறியும்செந்
தீயைத் தழுவி,
‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும்தண்
காற்றைத் தழுவி,
‘என்னுடைக்
கோவிந்தன்’ என்னும்;
வெறிகொள்
துழாய்மலர் நாறும்
வினையுடை
யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச்
சிறுமான்
செய்கின்றது
என்கண்ணுக்கு ஒன்றே?
_____________________________________________________
1. மைத்திரேயர் - ஒரு
முனிவர்.
2. தெய்வ சப்தம் ‘திவு
- கிரீடா’ என்பது போன்ற தாதுவிற் சொல்லுகிற
காந்தியைச் சொல்லுகிறது.
3. யஜூர். அச்சித்ரம்.
4. திருவிருத்தம், 2.
‘இவள் சிறுமி ஆகையாலே கலங்குகிறாள்,’ என்றபடி.
5. ‘சந்தோஷமும்
துக்கமும் உடையவளாயிருத்தலின், ஒன்றும்
தெரிகின்றதில்லை,’ என்கிறாள். ‘தெய்வவுரு’ என்று காந்தியைச்
சொல்லுகையாலே சந்தோஷம். ‘பெய்வளை’ என்று பலகாலும் கழலுகின்ற
வளை என்கையாலே துக்கம்.
|