வந
வந்தானே!’ என்பாள். மெய்
வேவாள் - இவள் தான் மயக்கத்தாலே கட்டிக்கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது
ஒழிவான் என்?’ என்னில், 1‘அந்த விராட்புருஷனுடைய முகத்திலிருந்து இந்திரனும்
அக்கினி தேவனும் உண்டானார்கள்,’ என்கிறபடியே, அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது.
அன்றிக்கே, ‘செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய்வேவாள்’ என்கிறாள் ஆகையாலே,
2இவளுடைய அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல். அன்றிக்கே, 3‘அந்தப்
பகவானை நினைப்பதனால் உண்டான சந்தோஷத்தோடு கூடினவனாய்’ என்கிறபடியே, ‘அவனுடைய நினைவாலே
நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ என்னுதல். 4‘தந்தையே! இந்த
நெருப்புக் காற்றாலே தூண்டப்பட்டதாக இருப்பினும், இங்கு என்னைக் கொளுத்த இல்லை; நான் நான்கு
பக்கங்களிலும் எல்லாத் திக்குகளிலும் தாமரைப்பூக்களாகிற விரிப்பினால் பரப்பப் பட்டனவாயும்
குளிர்ந்திருப்பனவாயும் பார்க்கிறேன்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்? அன்றிக்கே,
_____________________________________________________
1. நெருப்புச் சுடாமைக்கு
நான்கு வகையான காரணங்களை அருளிச்செய்கிறார்,
‘அந்த விராட்புருடன்’ என்று தொடங்கும்
பொருளையுடைய சுலோகத்தோடு,
‘திண்சுட ராழி அரங்கேசர்
திக்குத் திருச்செவியில்,
மண்கழ லில்,சத்ய லோகஞ்
சிரத்தின், மருத்துயிரில்,
தண்கதி ருள்ளத்தில், வானுந்தி
யில்,செந் தரணிகண்ணில்,
ஒண்கன லிந்திரன்
வான்முகப் போதி லுதித்தனரே.’
என்ற திருவரங்கத்து மாலைச்
செய்யுளை ஒப்பு நோக்குக.
‘அச்சுதன் முகத்தாலே’ என்றது,
சிலேடை : ‘அச்சுதன் காரணத்தால்’
என்பதும், ‘அச்சுதனுடைய முகத்திலே’ என்பதும் பொருள்.
2. இதனால், ‘சப்தமாத்திரமே
போதுமாயிற்று வேகாமைக்கு’ என்றபடி.
3. ஸ்ரீ விஷ்ணு புரா.
1. 17 : 39. இங்கு,
‘துப்பி னாற்செய்த கைகொடு
கால்பெற்ற துளிமஞ்சு
ஒப்பி னான்தனை நினைதொறும்
நெடுங்கண்கள் உகுத்த
அப்பி னால்நனைந்
தருந்துய ருயிர்ப்புடை யாக்கை
வெப்பி னாற்புலர்ந் தொருநிலை
யுறாதமென் துகிலாள்.’
என்ற கம்பராமாயணச் செய்யுள்
நினைவிற்கு வருகின்றது. (காட்சிப். 8.)
4. ஸ்ரீ
விஷ்ணு புரா. 1. 17 : 47. இது, அவன் நினைவாலே சுடாதிருப்பதற்குப்
பிரமாணம்.
|