முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
123

1

1‘ஸீதோபவ - தண்ணிது ஆகக்கடவாய்’ என்றவளும் இல்லை அன்றோ? ‘தண்ணிதாகக் கடவாய்’ என்றவள் தானே இங்ஙனம் செய்கிறாள்? ஆதலின், எரித்திலது’ என்னுதல். ஆக, 2‘பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ என்றபடி. 3‘ஹநுமானான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது’ என்றதனால், நாயகன் தழுவினமை உணரலாகும். 4‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.

    எறியும் தண் காற்றைத் தழுவி - வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. 5‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான

_____________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 53 : 28. இதனால், தன் சத்தியாலே வேவாதிருந்தாள்
  என்பதனைத் தெரிவித்தபடி.

  ‘தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
  நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
  நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
  தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.

2. ‘செந்தீயைத் தழுவி’ என்றதற்குச் சிலேடையாக அருளிச்செய்கிறார், ‘பிரிவு
  காலத்தில்’ என்று தொடங்கி. வாயு புத்திரன் - நெருப்பும், அனுமானும்.

3. வாயு புத்திரனை நாயகன் தழுவியதற்குப் பிரமாணம், ‘ஹநுமானான’ என்று
  தொடங்குவது. இது, ஸ்ரீராமா. யுத். 1 : 13.

  ‘ஆய காலையின் அமரர் ஆர்த்தெழத்
   தாயின் அன்பனைத் தழுவி னான்தனி
   நாய கன்பெருந் துயர நாமறத்
   தூய காதல்நீர் துளங்கு கண்ணினான்.’

(உயுத். களியாட். 109.)

  என்றார் கம்பநாட்டடிகள்.

4. நெருப்பு வாயுவின் புத்திரன் என்றதற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார்,
  ‘வாயுவினின்றும்’ என்று தொடங்கி. இது தைத்திரீய உபநிடதம்.

  ‘தலைமைசால் சிறப்பு வாய்ந்த தாமத அகங்கா ரத்தின்
  ஒலிஎழும்: ஒலியிற் றோன்று மோங்குவான்; வானிற் றோன்றும்
  மலியுமூறு; ஊற்றிற் றோன்றும் வளி;எறி வளியிற் றோன்றும்
  நிலவொளி; ஒளியி னின்று நிமிர்சுடர்க் கனலி தோன்றும்.’

  என்பது பாகவதம், சகமுனி தத்துவமுரைத்த அத்.

5. ‘மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ’!
  ‘வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ!’

  என்பன திருவாய்மொழி, 9. 9 : 1, 4.