முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
124

காற்றும் சுட்டிலது; இதுவன்றோ ஆச்சரியம்!’ என்பாள், ‘எறியும் தண்காற்றை’ என்கிறாள். 1‘பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ? ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை. என்னுடைக் கோவிந்தன் என்னும் - 2‘நீங்கி ஒரு கணநேரமும் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்!’ என்கிறபடியே, ‘பிரிவில் பொறுக்க வல்லனோ? அவன் உண்மை பிறர்பொருட்டாக அன்றோ இருப்பது?’ என்று சொல்லாநிற்கும். அன்றிக்கே, ‘கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்,’ என்னுதல். 3‘உலகத்தார் படியும் அன்று; விரஹநோயினர்கள் படியும் அன்று; உலகத்தார் படியாகில் நெருப்புச் சுடவேண்டும்; விரஹநோயினர்கள் படியாகில் காற்றுச் சுடவேண்டும்; இரண்டும் கண்டிலோம்,’ என்கிறாள்.

    வெறி கொள் துழாய் மலர் நாறும் - 4‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற்கூறிய கலவியால் வந்த பரிமளம் 5பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமே

_____________________________________________________

1. புருஷசூக்தம். 122 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புப் பார்க்கவும், ‘திண்சுடராழி.’
  ‘பிராண பூதமாய்’ என்றது சிலேடை : பிராணனாய் என்பதும்,
  பிராணனிடத்தில் தோன்றியது என்பதும் பொருள்.

2. ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘கோவிந்தன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘அவனுண்மை’ என்று தொடங்கி. கோவிந்தன் - ஸ்ரீராமபிரான். ‘கோவிந்தன்’
  என்பதற்கு வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கி. இங்குக் கோவிந்தன் - கிருஷ்ணன். இத்தால், பசுக்களை
  இரட்சிக்கையாலே பரோபகாரத்தன்மை சொல்லுகிறது. காற்றுக்கும்
  பரோபகாரத் தன்மை உண்டே? அவ்வளவில் ஒப்புமை கொள்க.

3. மேல் இரண்டு அடிகளிலும் அருளிச்செய்த பொருளை முடித்துக்
  காட்டுகிறார். ‘உலகத்தார் படியுமன்று’ என்று தொடங்கி.

4. ‘பிரிவு காலத்திலே சரீரம் திருத்துழாய் நாறும்படி என்?’ என்னும்
  வினாவிற்கு மூன்று வகையாக விடை அருளிச்செய்கிறார், ‘கோவை வாயாள்’
  என்று தொடங்கி.

5. ‘பத்தெட்டுக் குளிக்கும்’ என்றது, ‘பத்தெட்டு ஸ்நானத்துக்கும்’ என்றபடி.
  இவ்விடத்தில்,

  ‘ஒருபகல் பூசின் ஓராண் டொழிவின்றி விடாது நாளும்
  பெரியவர் கேண்மை போலும் பெறற்கரு வாச எண்ணெய்
  அரிவையர் பூசி யாடி யகிற்புகை யாவி ஊட்டித்
  திருவிழை துகிலும் பூணுந் திறம்படத் தாங்கி னாரே.’      

(சிந். 2737.)

  ‘ஒருநாட் பூசினும் ஓரியாண்டு விடாஅத்
  திருமா ணுறுப்பிற்குச் சீர்நிறை அமைத்துக்
  கரும வித்தகர் கைபுனைந் தியற்றிய
  வாச எண்ணெய்’                                

(பெருங். 2. 5 : 98-101.)

  என்பன ஒப்பு நோக்குக.