New Page 1
முன் கையிலே செறிந்த
வளையையுடையவள்; 1இதுவன்றோ இருக்கத் தகும்படி! முன்பு இருக்கும்படியாதல், பின்பும்
அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல். அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை
அன்றிக்கே, இவள் உடம்பிலே அவன் உடம்பில் திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள்,
‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல். ‘இதற்கெல்லாம் பற்றுக்கோடு எங்குத்து?’ என்பாள்,
‘சிறுமான்’ என்கிறாள். ‘நனி இளையள்’ என்றபடி. செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? -
‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.
அன்றிக்கே,
‘ஒன்றே’ என்பதற்கு, 2‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய்
நாறுவது ஆகாநின்றாள். ‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை;
போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது; திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’
என்ன ஒண்ணாது; ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.
(3)
369
ஒன்றிய திங்களைக்
காட்டி,
‘ஒளிமணி
வண்ணனே!’ என்னும்;
நின்றகுன் றத்தினை
நோக்கி,
‘நெடுமாலே!
வா!’ என்று கூவும்;
நன்றுபெய் யும்மழை
காணில்,
‘நாரணன்
வந்தான்’ என்று ஆலும்;
என்றுஇன மையல்கள்
செய்தார்
என்னுடைக்
கோமளத் தையே.
பொ-ரை :
‘பதினாறு கலைகளும் நிறைந்த சந்திரனைக் காட்டி,
‘ஒளி பொருந்திய படிகமணி போன்ற நிறத்தையுடையவனே!’
_____________________________________________________
1. ‘இதுவன்றோ இருக்கத்
தகும்படி’ என்றது, ‘இவள் கையும் வளையுமாயன்றோ
இருக்க அடுப்பது? அஃது இன்றிக்கே இருப்பதே!’ என்றபடி.
‘இப்போது
இவளுக்கு வளை உண்டோ?’ என்னும் வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘முன்பு
இருக்கும்படியாதல்’ என்று தொடங்கி.
2.
‘ஒன்றே’ என்பதற்கு வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘நெருப்பை’
என்று தொடங்கி.
‘ஒன்றே’ என்றது, ‘ஒரு வகையிலே அடைக்கப்பட்டதோ?
அன்றே,’ என்றபடி.
|