முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
129

370

370

        கோமள வான்கன்றைப் புல்கி,
            ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
        போம்இள நாகத்தின் பின்போய்,
            ‘அவன்கிடக் கைஈது’ என்னும்;
        ஆம்அளவு ஒன்றும் அறியேன்
            அருவினை யாட்டியேன் பெற்ற
        கோமள வல்லியை மாயோன்
            மால்செய்து செய்கின்ற கூத்தே!

    பொ-ரை : ‘இளமையையுடைய பெரிய கன்றுகளைத் தழுவிக் ‘கிருஷ்ணன் மேய்த்த கன்றுகள் இவையாகும்’ என்பாள்; செல்லுகின்ற இளமையையுடைய பாம்பின் பின்னே சென்று, ‘இது அவன் படுக்கை’ என்னாநின்றாள்; மேல் விளையக் கூடியது ஒன்றனையும் அறிகின்றிலேன். போக்கற்கு அரிய தீய வினைகளையுடைய யான் பெற்ற இளைய வல்லிக்கொடி போன்ற பெண்ணை மாயோன் மயக்கத்தைச் செய்து செய்கின்ற கூத்து என்னேதான்!’ என்கிறாள்.

    வி-கு : கோமளம் - இளமை; அழகுமாம், மேய்த்தன : வினையாலணையும் பெயர். கிடக்கை - படுக்கை. கூத்து - தொழில் உணர்த்தும் பெயர்; பகாப்பதம்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘இவளுக்கு இந்தத் துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது என்று அறிகின்றிலேன்?’ என்கிறாள்.

    கோமளம் வான் கன்றைப் புல்கி - 2‘பருவத்தால் இளையதாய் வடிவால் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்; ‘மாணிக்கம் போலே வேறுபட்ட சிறப்பினவாய்ப் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல். கோமளம் என்று மாணிக்கத்துக்கும் இளமைக்கும் பேர். ஆக, இப்படிக் 3காட்சிக்கு இனியவாய்

_____________________________________________________

1. ‘ஆமளவு ஒன்றும் அறியேன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘கோமளம்’ என்பது, இளமை; ‘வான்’ என்பது, பெருமை; ஆகையாலே,
  இரண்டற்கும் மாறில்லாமல் பொருள் அருளிச்செய்கிறார், ‘பருவத்தால்’
  என்று தொடங்கி. ‘கன்று’ என்பது. தொகுதி ஒருமையாதலின் ‘கன்றுகளை’
  என்று பொருள் அருளிச்செய்கிறார்.

3. ‘கோமளம்’ என்ற சொல்லிற்குரிய இரண்டு பொருள்களையும் திருவுள்ளத்தே
  கொண்டு அவற்றை அடைவே அருளிச்செய்கிறார், ‘காட்சிக்கு’ என்று
  தொடங்கி.