முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
13

இட

இட்டருளீர்’ என்பார்கள்; அருகே நின்று. ‘அப்படியே செய்து வாருங்கோள்’ என்று அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கொடுத்து விடுவார்கள்; அங்குப் போய்க் கொலை தப்பாது என்றபடி.

    1அடியிலே நாய் அடி இட்டு நலியத் தொடங்கிற்றே? 2நாய் முதலிலே காற்கூறு கொண்டது; ஆன பின்பு, செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மின் - சிவந்து மின்னுகின்ற முடியையுடைய திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைவில் பற்றுவதற்குப் பாருங்கோள். தன்னை அடைந்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடி உண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே இருப்பாரும் உண்டு; ‘விரையாமையால் உள்ள இழவே உள்ளது’ என்பார், ‘செம்மின் முடித் திருமாலை விரைந்து’ என்கிறார். ‘அவன் முடியைத்தரினும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்’ என்பார், ‘அடி சேர்மினோ’ என்கிறார். ‘நீங்கள் 3உங்கள் அடிவிடாதே கொள்ளுங்கோள்’ என்பதாம்.

(2)

335

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.

    பொ - ரை : ‘தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப்

_____________________________________________________

1. மேல் திருப்பாசுரத்தோடு கூட்டி ரசோக்தியாக அருளிச்செய்கிறார்.
  ‘அடியிலே’ என்று தொடங்கி. அடியிலே என்பதற்கு ‘முதற்பாசுரத்திலே’
  என்பதும், ‘காலிலே’ என்பதும் இரு பொருள். அடியிட்டு என்பதற்கும்
 
‘தொடங்கி’ என்பதும், ‘காலிலே பிடித்து’ என்பதும் இரு பொருள்.

2. மேலே கூறியதை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘நாய் முதலிலே’ என்று
  தொடங்கி. ‘காற்கூறு’ என்றது, சிலேடை : ‘காலாகிற பாகம்’ என்பதும்,
  ‘நாலில் ஒரு பாகம்’ என்பதும் பொருள். ‘காற்கூறு கொண்டது’ என்றதனால்,
  ‘முக்காற்கூறும் வெற்றிலை பிடித்தவர்கள் கொள்ளுகிறார்கள்’ என்பது
  தொனி.

3. ‘உங்கள் அடி விடாதே கொள்ளுங்கோள்’ என்றது, சிலேடை : அடி -
  திருவடியும் மூலமும்.