ம
மிருதுத்தன்மையை
உடையனவுமான கன்றுகளைத் தழுவி என்றபடி. 1கிருஷ்ணன் பருவம்போலே ஆயிற்று இவற்றின்
பருவம் இருக்கும்படி. கிட்டினார்க்கு ஒப்புமையை அடைதலே அன்றோ பலம்? கோவிந்தன் மேய்த்தன
என்னும் - 2‘கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனுமான கிருஷ்ணன்’ என்றும்,
3‘கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்’ என்றும் வருகின்றவாறே. ‘இவற்றினுடைய
பாதுகாவலுக்கு முடி சூடினவன் உகந்து காப்பாற்றினவை’ என்பாள். 4‘உரியவன் உணர்ந்து
நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு. 5கன்றின்
கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே - அது துள்ளிப் போகா நிற்குமே - அதனைக் கண்டு, ‘அவன் பரிகரமாகவே
இருந்தது’ என்பாள்.
போம் இள நாகத்தின்
பின் போய் - அவ்வளவிலே ஒரு பாம்பு போகாநிற்குமே, அதன் பின்னே போகா
_____________________________________________________
1. இளமைப்பருவமுடைய கன்றுகளைத்
தழுவுவதற்கு அடி யாது?’ என்ன,
‘கிருஷ்ணன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘இவற்றுக்குக் கிருஷ்ணன் பருவம் வருகைக்கு அடி யாது?’ என்ன,
‘கிட்டினார்க்கு’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘தம்மையே நாளும் வணங்கித்
தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள்செய்வ
ராதலின்’
என்பது பெரிய திருமொழி.
2. விஷ்ணு புரா.
5. 17 : 19.
3. திருநெடுந்தாண்டகம்,
16.
இவை இரண்டும், கன்றுகள்
கிருஷ்ணனோடு ஒத்த பருவமாயிருந்தன
என்பதற்கும், கன்றுகளைக் கிருஷ்ணன் மேய்த்ததற்கும் பிரமாணங்கள்.
4. கோவிந்தன் மேய்த்தன
ஆகையாலே இவை வான் கன்றுகளாயின என்று
கூறத் திருவுள்ளம் பற்றி அதனை அருளிச்செய்கிறார்,
‘உரியவன்’ என்று
தொடங்கி.
5. ‘கோவிந்தன் மேய்த்தன’
என்பதற்கு வெறுப்பிலே நோக்காக வேறும் ஒரு
கருத்து
அருளிச்செய்கிறார்,
‘கன்றின் கழுத்தை’ என்று தொடங்கி.
‘துள்ளிப்போகாநிற்குமே’ என்றது, ‘கோமள வான்’ என்றதன்
கருத்துப்
பொருள். ‘அவன் ஓடுமாறு போலே இவையும் ஓடாநின்றன,’ என்பது
கருத்து.
|