முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
131

நிற்கும். 1இவளுடைய போகப் பிராவண்யம் இருக்கும்படி. 2‘முத்தர்கள் எப்பொழுதும் பகவானை அனுபவிக்கும் அனுபவத்தாலே இருபத்தைந்து வயதினர்களாகவே இருப்பார்கள் அன்றோ? அவர்களுடைய இளமை இது என்றிருக்கிறாள்’ என்பாள், ‘இளநாகம்’ என்கிறாள். ‘கன்றைப் புல்கி’ என்றும், ‘நாகத்தின் பின்போய்’ என்றும் கூறாநின்றாள்; ‘இத்தனை உணர்த்தி உண்டோ?’ என்னில், கன்று ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தினைக் கட்டிக்கொண்டாள்; அம்புக்கு எட்டாதபடி பாம்பு ஓடாநிற்குமாதலின், அதன் பின்னே போகாநின்றாள். 3‘அது புக்க இடத்தே அவன் வரவு தப்பாது’ என்று காண்கைக்காக அதன் பின்னே போகாநிற்கிறாள் என்றபடி. 4அவன் தானும் பரம போகியாய் இருப்பான் ஒருவன் அலனோ? அவன் கிடக்கை ஈது எனும் - அது ஒரு தூற்றிலே போய்ப் புகுமே, அதனை நோக்கிக்கொண்டு கிடப்பாள்’ அவன் வந்தால் காண்கைக்கு.

    ஆம் அளவு ஒன்றும் அறியேன் - உலகமே அழியப் புகுகிறதோ?’ அறிகின்றிலேன். என்றது, ‘இவளை இழக்கவே உலகத்திற்குக் காரணமானவன் கிடைக்கமாட்டான்; காரணமானவன் இல்லாமையாலே காரியமான இவ்வுலகம் தன்னடையே இல்லையாமே அன்றோ?’ என்றபடி. அன்றிக்கே, ‘பாம்பு என்று மீளமாட்டுகின்றிலள்; இது என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள் என்னுதல்.

_____________________________________________________

1. பாம்பின் பின்னே போகுங்காரணத்தை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்,
  ‘இவளுடைய’ என்று தொடங்கி. ‘போகம்’ என்பது, பாம்பின் உடலுக்கும்
  அனுபவத்திற்கும் பெயர். பிராவண்யம் - ஈடுபாடு.

2. ‘நாகம்’ என்றதற்கு ஆதிசேஷன் என்று பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி,
  அதற்குத் தக ‘இள’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘முத்தர்கள்’
  என்று தொடங்கி.

3. ‘அதன் பின்னே போகிறது எதற்காக?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அது புக்கவிடத்தே’ என்று தொடங்கி.

4. ‘அப்படி அவன் வரவு தப்பாதோ?’ என்ன, அதற்கு ரசோக்தியாக விடை
  அருளிச்செய்கிறார், ‘அவன் தானும்’ என்று தொடங்கி. ‘பரம போகி’
  என்பதற்கு, ‘பரமனான போகியையுடையவன்’ என்றும், ‘பரமனான போகி’
  என்றும் பொருள் காண்க. போகி - பாம்பு; இன்பத்தையுடையவன்.