முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
133

371

371

        கூத்தர் குடம்எடுத்து ஆடில்,
            ‘கோவிந்த னாம்’எனா ஓடும்;
        வாய்த்த குழல்ஓசை கேட்கில்,
            ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
        ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்,
            ‘அவன்உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
        பேய்ச்சி முலைசுவைத் தாற்குஎன்
            பெண்கொடி ஏறிய பித்தே!

    பொ-ரை : கூத்தாடுமவர்கள் குடங்களை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாடினார்களாகில், ‘கோவிந்தன் ஆம்’ என்று ஓடும்; பொருந்திய வேய்ங்குழலின் இசையைக் கேட்டால், ‘கிருஷ்ணன்தான்’ என்று மோகிப்பாள்; ஆய்ப்பெண்கள் கையிலே வெண்ணெயைப் பார்த்தால், ‘இது அந்தக் கிருஷ்ணன் உண்ட வெண்ணெய் ஆகும்,‘ என்பாள்; பூதனையினுடைய முலையைச் சுவைத்து அவளை உயிர் உண்ட கண்ணபிரான் விஷயத்தில் என்னுடைய கொடி போன்ற பெண்ணானவள் கொண்ட பிச்சு இருந்தவாறு என்னே!

    ஈடு : ஆறாம் பாட்டு. 1தன் மகளுடைய பிச்சுக்கு நிதானத்தையும் அது அடியாக வந்த பிச்சையும் சொல்லுகிறாள்.

    கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் - இவள் தன்மை அறிந்திருக்கையாலே ‘இவளைக் கிடையாது’ என்று கூத்து விலக்கியிருந்தாற்போலே காணும் கிடப்பது; ஆதலின், ‘ஆடில்’ என்கிறாள். 2ஆயர்கள் செருக்குக்குப் போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்தாயிற்று குடக்கூத்தாகிறது. விளைவது அறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அதனைக்கண்டு, இக்குடக்கூத்து ஆடும்போது நிறைந்த பசுக்களையுடைய கிருஷ்ணனாக வேண்டும் என்று காண ஓடும். ‘இரந்து திரிகின்ற இவர்கள் அவன் ஆகையாவது என்?’ என்பார்கள்

_____________________________________________________

1. ‘பேய்ச்சி முலை சுவைத்தாற்கு’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து
   நீணில மளந்தோன் ஆடிய குடமும்’

  ‘காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உஷை காரணமாகச்
  சிறைவைத்தலின், அவனுடைய சோ என்னும் நகர வீதியில் நிலங்கடந்த
  நீனிறவண்ணன் குடங்கொண்டாடிய குடக்கூத்தும்’

(சிலப். கடலாடு காதை. 54, 55.)